நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை ?

நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 21.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 21.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் / காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement

திருப்பெரும்புதூரில் மின் தடை           

திருப்பெரும்புதூர் கோட்டம், திருப்பெரும்புதூர் உப கோட்டம், இருங்காட்டுக்கோட்டை 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33KV and 11KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை இருங்காட்டுக்கோட்டை, சிப்காட், காட்ராம்பாக்கம், கீவலூர், தண்டலம், மேவலூர் குப்பம், செட்டிப்பேடு, பாப்பான்சத்திரம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.