திருப்பெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.
பராமரிப்பு பணி காரணமாக மின்தடை
மின்சார விநியோகத்தில் பராமரிப்புப் பணிகள் மிகவும் அவசியமானவை. இந்தப் பணிகள் பெரும்பாலும் பாதுகாப்பு, பழுது நீக்குதல், மேம்படுத்துதல், மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகிய காரணங்களுக்காகவே மின்வாரியத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. மின் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் பிற மின்சாதனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முதன்மையான நோக்கம். எனவே பராமரிப்பு பணி காரணமாக மாதம் ஒருமுறை மின்தடை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் நாளை மின்தடை ?
திருப்பெரும்புதூர் கோட்டம், நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 25.06.2025 (Wednesday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள் என்ன ?
சரோஜினி நகர், ராஜுவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், BVL நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம், ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி, TMA ROAD தாலுக்கா ஆபீஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், CASA GRAND, VRP CHATHIRAM போந்தூர் தேரேசாபுரம் பிள்ளைப்பாக்கம் கிராமம் குண்டுபேரம்பேடு, தத்தனூர், வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.