காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி.சி.க 1 , சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2 ,சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ,பாதாள சாக்கடை , குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர் கொடி
எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு, எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை. அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைப்பட்சமான நிர்வாகத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.
கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால் வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும் மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு முறைகேடுகள் ஈடுபடுவதாக கோரி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாநகராட்சி பரபரப்பாக ஏற்படுத்தியது.
விடிய விடிய நடைபெற்ற போராட்டம்
மேலும் மாலையுடன் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், மாநகராட்சி ஆணையர் தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்ததால் அதிமுக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 9 கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தாருடன் நுழைவாயிலில் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் காலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மதியம் மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு, வந்த பொழுது பாஜகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்ததை எடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் போராட்டமும் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.