வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு அதிகாரிகளுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர், பெரும்பாலும் தாழ்வான உள்ள பகுதிகளிலும் அதிக மழை நீர் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்படும் இடங்கள் என கண்டறியப்பட்டு அதற்கு முன்னுரிமை அளித்து அந்தப் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்,
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே சாலையில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் நேற்று இரவு பெய்த லேசான மழைக்காக பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் என்று காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ அதிரடி உத்தரவு
மேலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயத்தில் இருப்பதாக பகுதி மக்கள் தெரிவித்த நிலையில் அதன் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தேங்காத அளவிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாநகராட்சி மையப்பகுதியில் உள்ள அலகாபாத் ஏரியில் தூர்வாரி புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் பருவமழை துவங்குவதற்கு முன்பு நீர் தேக்குவதற்காக அமைக்கும் பணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் நீர்வளத்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முடித்து விடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எழிலரசன் கூறுகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறது. ஒரு சில இடங்களில் இருக்கும் குறைகளை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டு, வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வருகிறோம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோப்புகள் தேங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசுகையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து அரசு கோப்புகளும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக துணை முதலமைச்சர் வந்தபோது வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டது. நிதி ஒதுக்கீடு உடனடியாக செய்து மாவட்ட நிர்வாகம் மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்தும் அளித்துதான் வருகிறது. அவர் எதற்காக அப்படிப் பேசினார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.