காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 2-ல் ஏலம்: மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு!
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, ஜூன் 02-தேதி ஏலம் விடப்பட உள்ளது."

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த முறையான அறிவிப்பை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஏலம் குறித்த விவரங்கள்
காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் பல்வேறு வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ என மொத்தம் 25 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த பொது ஏலமானது, வரும் ஜூன் 2-ம் தேதி, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் வைப்புத் தொகை விவரங்கள்
இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது ஆதாருடன் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 1-ம் தேதிக்குள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம். முன்பதிவின் போது, இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1,000 மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு (ஆட்டோ) ரூ. 2,000 என்ற வீதத்தில் வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.
ஏலம் எடுப்பவர்களுக்கான நிபந்தனைகள்
ஏலத்தில் வெற்றி பெற்று வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையுடன் கூடுதலாக 18 சதவீத சேவை வரியைச் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லலாம். அதே சமயம், ஏலம் எடுக்கத் தவறியவர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும் என்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















