இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள கிளை நிறுவனங்கள், மற்ற நிதி நிறுவனங்கள் ஆகியவை ஸ்விஸ் வங்கியில் பணம் சேமித்து வைத்திருப்பது அதிகரித்துள்ளது.


14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்விங் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் 50 சதவிகிதம் உயர்ந்து 3.83 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 30,500 கோடி ரூபாயாகும். 


அதேபோல, பத்திரங்கள் உள்ளிட்டவையின் மூலம் இந்தியர்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. வைப்பு தொகை அதிகரித்திருப்பதும் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்விஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் 2.55 பல்லியன் டாலர்களாக இருந்தது. 


இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் அதிகரித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் சேமிப்பு அல்லது வைப்பு தொகையும் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக, வைப்பு தொகை சேமிப்பு குறைந்த வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.


2021ஆம் ஆண்டின் இறுதியில், சுவிட்சர்லாந்து தேசிய வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் சுவிட்சர்லாந்தின் நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் 3,831.91 மில்லியன் டாலர்களை தொட்டது. 2020ஆம் ஆண்டின் இறுதியில், 504 மில்லியனாக இருந்த இந்தியர்களின் வைப்பு தொகை 602.03 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.


மற்ற ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பணம் 1,225 மில்லயன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அறக்கட்டளை மூலம் சேர்க்கப்பட்ட பணம் 2 மில்லியிலிருந்து 3 மில்லியன் ஸ்விஸ் பணமாக அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக இந்தியர்கள், பத்திரங்கள் மூலம் 2,002 மில்லயன் ஸ்விஸ் டாலர்களை சேமித்து வைத்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு, இந்தியர்கள் சேமித்து வைத்த பணம் 6.5 பில்லியன் ஸ்விஸ் டாலர்களாக இருந்தது. 2011, 2013, 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் இந்தியர்கள் சேமித்து வைத்த பணம் தொடர் சரிவை சந்தித்தது. 


பத்திரம், வைப்பு தொகை உள்ளிட்டவை மூலம் இந்தியர்கள் சேமித்தை வைத்த பணம் கடந்த 2019 ஆம் ஆண்டு சரிந்தது. இதனிடேயே, 2021 ஆம் ஆண்டு இது அதிகரித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண