(Source: ECI | ABP NEWS)
இளம்பெண் ஆர்டர் செய்த வெஜ் பிரியாணி! ஆனால் வந்தது...? - ஹோட்டல் ஊழியரை தட்டித்தூக்கிய போலீஸ்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நவராத்திரி பண்டிகையின் போது சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் அளித்த புகாரில் உணவக ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நவராத்திரி பண்டிகையின் போது சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் அளித்த புகாரில் உணவக ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், ஆன்லைன் உணவு விநியோக செயலியான ஸ்விக்கி, தான் ஆர்டர் செய்த சைவ பிரியாணிக்கு பதிலாக அசைவ பிரியாணியை தவறுதலாக டெலிவரி செய்ததாக தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோவில் சாயா சர்மா என்ற பெண், நவராத்திரி பண்டிகையின் போது, பல இந்துக்கள் சைவ உணவு முறைகளைப் பின்பற்றும் உணவகம் வேண்டுமென்றே தனக்கு சிக்கன் பிரியாணியை அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் ஒரு சுத்த சைவம் உண்பவர் எனவும் ஆனால் இந்த உணவை முதலில் இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன்கள் சாப்பிட்ட பிறகே இறைச்சி இருந்தது தெரியவந்தது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண், “லக்னவி கபாப் பராத்தா” உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும், ஆனால் சிக்கன் பிரியாணியை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்க உணவகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது மூடப்பட்டிருப்பதாகவும் அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மத உணர்வுகள் குறித்து பயனர்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிலர் விற்பனை நிலையம் மற்றும் ஸ்விக்கி மீது புகார் அளிக்க பரிந்துரைத்தாலும், மற்றவர்கள் நவராத்திரியின் போது அசைவ உணவகத்தில் உணவு ஆர்டர் செய்து வெளியில் இருந்து சாப்பிட்டதற்காக அந்தப் பெண்ணைக் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் ஊழியரை கைது செய்துள்ளனர்.





















