அண்மையில் ஒரு உடலில் பொருத்தப்பட்ட கேமிராவின் வீடியோ காட்சிகள் அதைப் பொருத்தியிருந்த நபரை விபத்துக் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றியுள்ளது. இதன்மூலம் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது வண்டியிலும் உடலிலும் பாடிகேம் அல்லது டேஷ்கேம் பொருத்த வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு விபத்து தொடர்பான வீடியோ அண்மையில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணும், அவரது பின்னால் அமர்ந்து வந்த பில்லியன் ரைடரும் ஸ்கூட்டரில் இருந்து யாருமே மோதாமல் தானாகவே கீழே விழுவதை இது காட்டுகிறது. எனினும், பின்னால் வந்த நபர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வீடியோவைப் பார்த்தவுடன் அது பின்னால் வந்த அந்த நபருடைய தவறல்ல என்று தெரியும். இந்தச் சம்பவத்தின் முழு எபிசோடும் அவரது பாடி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.





இந்த காட்சிகள் ட்விட்டரில் பகிரப்பட்டு தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


அந்த வீடியோவில் ஒரு பெண் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்வதைக் காட்டுகிறது, திடீரென்று அவர் நடுரோட்டில் தனது பின்னால் அமர்ந்திருப்பவருடன் கீழே விழுந்தார். அப்போது, ​​பைக்கை ஓட்டிச் சென்ற ஒருவர், அவர்களுக்குப் பின்னால் வந்து நிறுத்துகிறார். பெண்கள் இருவரும் முதலில் தாங்கள் கீழே விழுந்த விபத்துக்கு அவரைக் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் அவர்களது வாகனம் அவரது பைக்கில் மோதியதாக அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இருந்தாலும் பின்னால் வந்தவரின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவின் காட்சிகள் அந்த நபரிடம் எந்த தவறும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.இந்த வீடியோ தற்போது வைரலானதை அடுத்து பாடிகேம் மற்றும் டாஷ்கேமின் முக்கியத்துவத்தை இணைய பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு பயனர் தனது கருத்தில் “தற்போதைய சூழலில் வாகனங்களில் முன் மற்றும் பின் டாஷ் கேம் மிகவும் அவசியம். அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் நடக்கும் சூழலில் அதனைப் பதிவு செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.