வயிற்றை அறுத்து குழந்தையை பெற்றெடுத்த பெண்! அதிர்ச்சியில் ஏரியா மக்கள் - நடந்தது என்ன?
பிரசவ வலியை தாங்க முடியாமல் கத்தியால் வயிற்றை அறுத்துக்கொண்டு குழந்தையை பெற்றெடுத்த பெண்.

பிரவச வலியை தாங்க முடியாமல் ஒரு பெண், குழந்தையை பெற்றெடுக்க சமையலறை கத்தியால் தனது வயிற்றை அறுத்துக் கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
வயிற்றை அறுத்துக்கொண்ட பெண்
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் நந்த்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் நான்கை தேவி. கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் தனியாக வசித்து வந்ததாக அக்கம்பத்தினர் தெரிவித்தனர். ஒன்பது மாதம் கர்ப்பிணியான இவர், நேற்று (வியாழக்கிழமை) பிரசவ வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியை தாங்க முடியாமல் இருந்த அவர், குழந்தையை பெற்றெடுக்க சமையலறை கத்தியால் தனது வயிற்றை வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
பெண் குழந்தையை பெற்றொடுத்தார்
வலியால் துடித்து, ரத்த வெள்ளத்தில் நனைந்து தரையில் கிடந்தபோது, பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் வந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ஃபக்கர்பூரில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதிக ரத்தப்போக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் அங்கிருந்து லக்னோவில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையத்திற்கும் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பஹ்ரைச்சில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கு ஆழமான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது வயிறு கிழிந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறினார். சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், பிரசவ வலி தாங்க முடியாமல் தனது வயிற்றை அறுத்துக் கொண்டதாக அந்தப் பெண் கூறியதாக சொல்லப்படுகிறது. சில தகவல்கள், அவர் தனது வயிற்றை வெட்ட பிளேடைப் பயன்படுத்தியதாகவும், வேறு சில தகவல்கள், அதற்காக அவர் சமையலறை கத்தியைப் பயன்படுத்தியதாகவும் கூறுகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் தனியாக வசித்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
பிரசவ வலியை தாங்க முடியாமல் வயிற்றை அறுத்துக்கொண்டு குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























