மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வின் எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷனை தனது கணவர் என்று அபர்ணா தாக்கூர் என்ற பெண் லக்னோவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  ​​


அந்த செய்தியாளர் சந்திப்பில், “ 1996 ஆம் ஆண்டு ரவிகிஷனை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும்,  தங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அபர்ணா தாக்கூர் கூறியுள்ளார். ரவி கிஷன் என்னயும் எனது மகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் கூறியுள்ளார். அபர்ணா தாக்கூரின் இந்த பேட்டி, உத்திரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 






ரவி கிஷன் யார்?


ரவி கிஷன் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். தற்போது உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மக்களவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். போஜ்புரி மற்றும் ஹிந்தி சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும்  ரவி கிஷனின் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரவி கிஷன் ப்ரீத்தி சுக்லா என்பவரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ரிவா கிஷன் என்ற ஒரு மகள் உள்ளார்.


 






அபர்ணா தாக்கூர் தனக்கும் ரவி கிஷனுக்கும் மகள் இருப்பதாக கூறிய நிலையில், லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகள் என கூறப்பட்ட ஷினோவாவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நான் தொடக்க காலத்தில் ரவி கிஷனை மாமா என அழைத்து வந்தேன். ஆனால் எனக்கு 15வயது இருக்கும்போதுதான் ரவி கிஷன் எனது தந்தை எனத் தெரியவந்தது. எனவே அவர் என்னையும் எனது அம்மாவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது பிறந்த நாளுக்கு ரவி கிஷன் எங்களது வீட்டிற்கு வருவார். அவர் எங்களை ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என கூறினார்.