இந்தியவின் முதல் பெண் பொறியாளர் லலிதா பல்வேறு போராட்டங்களை கடந்து பொறியியல் துறையில் சாதனைகள் புரிந்ததுடன் தனது துறையில் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்.


தேசிய பொறியாளர்கள் தினம் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பொறியாளர்களின் பங்களிப்பினை போற்றும் விதமாக இது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த பொறியாளர்களில் ஒருவரான விஸ்வேஸ்வரயாவின் பிறந்தநாளில் (செப்டம்பர் 15,1861) பொறியியல் துறையில் அவரின் பங்களிப்பினை போற்றும் வகையில் பிறந்தநாளை நினைவுகூர ”தேசிய பொறியாளர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவருடைய சாதனைகள் போற்றப்படுகிறது. இருப்பினும் லலிதாவின்பங்களிப்பு குறித்தும் பேசப்படுவதும் முக்கியத்துவம் வாய்ந்தது.


 ஓர் பெண் பொறியாளரின் கதை 


தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ஏழு குழந்தைகளில் ஐந்தவாது பெண் குழந்தை லிலிதா. 1919 ஆகஸ்ட், 27 அன்று பிறந்தார். நடுத்தர வர்க்க குடும்பமாக இருந்தாலும் லலிதாவின் தந்தை பெண் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்தவராக இருந்தார். லலிதாவின் சகோதரர்கள் பொறியாளர்களாகினர். ஆனாலி, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவிலும் கல்வி என்பது பெண்களுக்கு மறுக்கப்பட்டது. லலிதா மேற்படிப்பை தொடர்வதில் அவரது குடும்பத்தினருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. 15 வயதில் லலிதாவிற்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அப்போது லலிதா பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கிறார்.


கனவு மெய்பட்ட காலத்தின் கதை 


லலிதாவின் வாழக்கையில் இவ்வளவு துயரங்களை போரடியும் தன் கனவுக்கு உயிர் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதில் லலிதாவின் கணவர் இறந்துவிடுகிறார். அன்றைய மதராஸ் மாகாணத்தில் பெண்கள் கணவரை இழந்தால் என்னென்ன சடங்குகள் உண்டோ அனைத்தும் லலிதாவிற்கு நடந்திருகிறந்து. கைம்பெண் என்றதும் மொட்டை அடித்து, வெள்ளை ஆடை அணிவித்து யாரையும் பார்க்க கூடாது என தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். லலிதாவிற்கு 4 மாத கைக் குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் எண்ண மேலோங்கியது. சமூக கட்டமைப்பில் பெண்கள் எதிர்கொண்ட / கொள்ளும் கொடுமைகளை சொல்லில் வரைந்துவிட முடியாது. ஆனால், சிறு வயதில் பல துன்பங்களை லலிதா அனுபவித்ததாக பின்னாளில் அவரது மகள் சியாமளா செனுலு (Shyamla Chenulu) வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். 


 



லலிதா Source: College of Engineering, Guindy/ Facebook.


பொறியியல் கல்லூரியின் முதல் மாணவி 


உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார்.


அன்றைய காலகட்டதில் பெண்கள் கல்வி கற்பதில் கடும் தடைகள் இருந்தாலும் மருத்துவ துறையை பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், லலிதாவின் தேர்வு பொறியியல் துறையாக இருந்திருக்கிறது. அதற்கு முழு காரணம அவரின் குழந்தை. 4 மாதங்களே ஆன குழந்தை என்பதால் தான் தேர்ந்தெடுக்கும் துறை அதிகம் நேரத்தை கேட்பதாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். 


லலிதாவின் தந்தை பப்பு சுப்பராவ்  (Pappu Subba Rao, ) கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறை
பேராசிரியராக இருந்தவர். இவர் தனது மகளின் கல்வி பாதிக்க கூடாது என கிண்டி பொறியியக் கல்லூரியின் முதல்வரிடம் பேசி, லலிதாவுக்கு அங்கு சேர்ந்து பயில அனுமதி கிடைத்தது. கல்லூரில் பயில வந்த முதல் மாணவி என்பதால் கல்லூரி நிர்வாகம் அவருக்கு அட்மிசன் வழங்க யோசித்திருக்கிறது. ஆண்கள் மட்டுமே அதிகமாக இருந்த கல்லூரியில் லலிதா ஒருவர் மட்டுமே மாணவி. இருப்பினும் தன் கல்வி பயில ஏற்ற சூழல் இருப்பதை கல்லூரி நிர்வாகமும் உடன் படித்தவர்களும் உறுதி செய்ததாக அம்மா பகிர்ந்து கொண்டதாக சியாமளா நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 


லலிதா ஹாஸ்டலில் தனியாக இருந்து எப்படியோ படித்து முடித்திருக்கிறார். இதற்கிடையில், லலிதா மட்டுமே தனியா இருப்பதை நினைத்து வருந்திய அவரது தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் பேசி பெண்களுக்கும் மாணவர் சேர்க்கையை அனுமதிக்குமாறு கோரியிருக்கிறார். லலிதாவால் மற்ற பெண்களுக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியின் படிக்க வாய்ப்பு உருவானது. 


 நாட்டின் முதல் பெண் மின்சார பொறியாளராக உயர்ந்தவர் லலிதா. லலிதா, சிம்லா மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பணியில் சேர்ந்தார். தந்தையுடன் சேர்ந்து மின் இசைக்கருவி, புகையற்ற அடுப்பு போன்றவற்றை தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் பணியாற்றினார். Associated Electrical Industries, Indian Standards Institution ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றினார். 


ஐ,நா. சபையின் பொறியியல் ப்ராஜெக்ட்களில் இலங்கை நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கன்சல்டண்ட் ஆக இவர் பணியாற்றினார். 


 



லலிதா குடும்பத்துடன் Courtesy: சியாமளா செனுலு


 


இந்தியா முழுவதும் சப்ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு என பல திட்டங்களில் பணி செய்தார். புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனரேட்டர்கள் இவர் வடிவமைத்தவையே. 1964-ம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த முதல் பெண்கள் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டிற்கு (nternational Conference of Women Engineers and Scientists (ICWES)) அழைக்கப்பட்டார். 


1965-ம் ஆண்டு லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார்.


நியூயார்க் நகரில் கருத்தரங்கில் லலிதா இப்படி உரையை தொடங்கியிருப்பார். “ 150 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால், என் கணவரோடு சேர்ந்து தீயில் எரிந்திருப்பேன்.” என்று குற்ப்பிட்டு தான் கடந்த வந்த பாதையையும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் பற்றியும் உரையில் குறிப்பிட்டிருப்பார் லலிதா. 


 



லலிதா 1964-ல் நியூயார்க்கில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டபோது-- Image taken from: Mathisarovar/ Dr. Shantha Mohan.


சமூக கட்டமைப்பு கொடுத்த அழுத்தங்கள் அனைத்தயும் போராடி இந்தியாவின் முதல் பொறியாளராக இருந்தவர். பெண்களின் கல்விக்கு முன்னுதாரணமாக விளங்கினார். சமூக கட்டமைப்பு கொடுத்த அழுத்தங்கள் அனைத்தயும் போராடி இந்தியாவின் முதல் பொறியாளராக இருந்தவர். பெண்களின் கல்விக்கு முன்னுதாரணமாக விளங்கினார். லிலிதா மூளையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு ’brain aneurysm ’ காரணமாக 60 வயதில் உயிரிழந்தார்.


லலிதாவின் பங்களிப்பும் வாழ்க்கையும் வராலாற்றில் எப்போதும் இருக்கும். கொண்டாடப்படும்; எவ்வளவு இன்னல்களுக்கும் பிறகும் தன் கனவுலகில் வாழ்ந்த கதையாக நிலைத்திருக்கும்.