தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்தார்


மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசன் மேற்குவங்கம் மாநிலத்தில் பொறுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தின் பொறுப்பாளராக உள்ள இல.கணேசன் அவர்களது அண்ணின் 80 வது பிறந்த நாள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்காக மேற்குவங்கம் முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்தார்.


அந்த அழைப்பை ஏற்ற மம்தா பானர்ஜி சற்று முன் தனி விமான மூலம் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர் சென்னையில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டு சென்றார்.






சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவரது இல்லத்திற்கு சென்று மம்தா நேரில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். 


மேலும் பாஜக அல்லாத சமூகநீதி கூட்டமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்தும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.