பைக் ஸ்டண்ட் செய்த நபருக்கு நேர்ந்த விபரீதம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இணையத்தின் வைரல் வீடியோக்களை பார்த்தால் அதில் நிச்சயமாக பைக் ரேஸ், பைக் ஸ்டண்ட் வீடியோக்களுக்கு குறைவிருக்காது. அப்படி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் @the_corner__kid என்பவர் பதிவிட்டுள்ளார். இது 2.2 மில்லியன் பார்வைகளையும் கடந்து சென்றுள்ளது.


அந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஆபத்தான முறையில் அதில் ஏறி ஸ்டண்ட் செய்கிறார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அவர் அதிலிருந்து கீழே விழுந்து விடுகிறார். 


ஸ்டண்ட் வீடியோ : 


அந்த வீடியோ நவம்பர் 8ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். சிலர் இளைஞரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர். சிலர் அந்த இளைஞரின் முட்டாள்தனத்தை வசைபாடியுள்ளனர்.






அந்த நீதிமன்ற உத்தரவை மறக்க முடியுமா?


கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணாசாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ் (வயது 19) மற்றும் முகமது சைபான் ( 19 ) ஆகிய இருவரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதரபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என்பதும் பைக் சாகசங்களில் ஈடுபடும் இவருக்கு 14 ஆயிரம் பாலோயர்ஸ் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரியவந்தது.




மேலும் பைக் சாகசத்தில் ஈடுபட பயன்படுத்தியது இவரது நண்பர் வாகனம் என்பது தெரியவந்ததையடுத்து வண்டி எண்ணை வைத்து ஹைதரபாத்தில் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்தனர்.


முக்கிய நபரான பினோய்க்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நூதன தண்டனை வழங்கினார். ஒரு நாள், காலை 9.30மணி முதல் 10.30மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30மணி வரையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலிலே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும் எனவும் அடுத்த 5 நாட்களுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.