மக்கள் நலனுக்காக தபால்துறையால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் கிராம சுரக்ஷா யோஜனா என்பது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அஞ்சல் அலுவலகத்தின் திட்டங்களில் ஒன்று. இந்த கிராம சுரக்ஷா யோஜனா திட்டமானது பொதுமக்கள் குறைந்த முதலீடு செய்து பெரும் லாபத்தை திரும்பப் பெறக்கூடிய ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு ரூ. 1411 முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்தைப் பெற முடியும். பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு பெரும் உதவிகளை வழங்குவதற்காக தபால் நிலையத்தின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


குறிப்பிட்ட இந்த தபால் அலுவலகத் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், 5 வருட முடிவில் இதை ஒரு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.




வயது வரம்பு மற்றும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை:


19 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 லட்சம் வரை இங்கு முதலீடு செய்யலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் இதற்கான பிரீமியம் செலுத்தலாம்.


உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ரூ. 10 லட்சம் முதலீடு செய்ய விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ. 1515 முதலீடு செய்வதன் மூலம் தொடங்கினால், அவருக்கு 55 வயதில் ரூ. 31.60 லட்சமும், 58 வயதில் ரூ. 33.50 லட்சமும், 60 வயதில் ரூபாய் 34 லட்சங்களாகவும் கிடைக்கும்.


அஞ்சல் அலுவலகத்தின் கிராம சுரக்ஷா யோஜனா திட்டமானது கடன் வசதி போன்ற பல நன்மைகளை நமக்கு வழங்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த 4 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கடன் கிடைக்கும். அவசரகால கேஸ்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில்  30 நாட்கள் கெடு நேரம் அனுமதிக்கப்படும். முதலீடு செய்த தேதியிலிருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு முன் திட்டத்தை மூடிவிட்டால், அந்த நபர் போனஸுக்கு தகுதி பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.