முதியவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு:


இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவது இப்போது சர்வசாதரணமாக ஆகிவிட்டது. பொது இடங்களில் நடந்து செல்லும் பொழுது, உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் சமயங்கள் மற்றும் வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அப்படி திடீரென மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படும் மூலம் மாரடைப்பில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.


உயிரை காப்பாற்றிய பெண் டாக்டர்:


அது போன்ற சம்பவம் தான் டெல்லியில் நடைபெற்று இருக்கிறது. டெல்லி விமான நிலையத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு விழுந்த முதியவரை பெண் டாக்டர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.





அதாவது விமான நிலையத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் 60 வயதுக்கு மேல் நிரம்பிய முதியவர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


இதனால் அவர் மயங்கியுள்ளார். இந்த வேளையில் அங்கு வந்த பெண் டாக்டர் ஒருவர் யோசிக்காமல் அவருக்கு சிபிஆர் உயிர்காக்கும் முறையை அளிக்க தொடங்கினார். அதன்படி மாரடைப்பால் மயங்கிய முதியவரின் மார்பு பகுதியில் இரண்டு கைகளை வைத்து அழுத்தம் கொடுத்தார். அதன்பிறகு அவரின் கையை பிடித்து பல்ஸ் பார்த்து சிறிது சிறிதாக இடைவெளி விட்டு மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்தார்.






சமூக வலைதளங்களில் பாராட்டு:


இப்படி 5 நிமிடம் அவர் செய்த நிலையில் அந்த முதியவர் கண்விழித்தார். இது அங்கிருந்தவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிபிஆர்(Cardiopulmonary resuscitation) உயிர் காக்கும் முறையை பயன்படுத்தி கண்விழிக்க வைத்த பெண் டாக்டரை சமூக வலைதளங்களின்  பாராட்டி வருகின்றனர்.