புகுந்த வீட்டுக்கு வந்தபோது யாரும் ஆரத்தி எடுக்க வராததால், கோபம் கொண்ட மணப்பெண் வீட்டின் மீது ஏறி அமர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், நான்காவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. வேகமாக சென்றுக்கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் சில வைரல் வீடியோக்கள் அவர்களை சிறிது நேரம் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. 




தற்போது, சுவாரஸ்யமாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் வீட்டுக்கு மணக்கோலத்தில் வந்தபோது, ஆரத்தி தட்டுடன் தன்னை வரவேற்க மணமகன் வீட்டார் யாரும் வராத கோபத்தில், புதுமணப்பெண் ஏணியில் ஏறி வீட்டின் கூரை மீது அமர்ந்து கொண்டு கீழே இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.




இதனைத்தொடர்ந்து, சமாதானப்படுத்த முயன்ற மணமகன், ஏணியை வைக்க மணப்பெண் காலால் அதை எட்டி உதைத்துள்ளார்.இதன்பின்னர், பெண் வீட்டார் எப்படியோ அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர்.




இந்த காட்சிகளை எல்லாம் அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சுவாரஸ்யமான காட்சிகள் நடைபெற்ற இடம் எது வென்று தெரியவில்லை, வீடியோவை பார்க்கும்போது அநேகமாக வடஇந்தியாவாக இருக்கும் என்று தெரிகிறது.  


மேலும், செய்திகள் படிக்க: