டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு குறித்த கருத்து வேறுபட்டால் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ராமநவமியை முன்னிட்டு அசைவ உணவை தவிர்க்ககோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் வலியுறுத்தினர். இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய, போலீஸ் துணை கமிஷனர் (தென்மேற்கு) மனோஜ் சி, “தற்போதைக்கு வன்முறை எதுவும் இல்லை. ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, அது முடிந்தது. நாங்கள் அனைவரும் எங்கள் குழுவுடன் இங்கு இருக்கிறோம். பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பேரில், இங்கு வந்துள்ளோம். சம்பவம் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அதனைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்