பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற மூத்த தலைவர்களின் தலைமையின் கீழ் பாஜக சந்தித்து இருக்கும் இந்த தோல்வியினால் ஏற்பட இருக்கும் மாற்றங்களை பற்றி அலசுவதற்கு முன்பு, கடைசி 7 ஆண்டுகளில் பாஜக சந்தித்திடாத பெரும் தோல்வி இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனினும், மேற்கு வங்க மாநிலத்தில் 77 இடங்களை கைப்பற்றி 38.1% வாக்குகளை பெற்றது பாஜகவிற்கு மகிழ்ச்சியை தருவதாக அமையலாம். மேற்கு வங்க மாநிலத்தை போல, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களின் முடிவில், இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் பொறுப்பை இன்னும் எட்டவில்லை என்பது நிரூபணமாகிறது.


                   


 


மறுபுறம், மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சியையும் குறிப்பிட வேண்டி உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் 76 இடங்களை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை. 2016-ம் ஆண்டு 10.2% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 2021 தேர்தலில் 38.1% வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரி மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியில், பாஜக சில இடங்களை கைப்பற்றியுள்ளது. 


எனினும்,  2019 நாடாளுமன்ற தேர்தலில் 40.2% வாக்குகளை பெற்ற பாஜக, 2016 சட்டமன்ற தேர்தலில் இரண்டு சதவிதம் குறைவாக பெற்றது பெரும் பாதிப்பை ஏற்படுத்திடவில்லை என்பது போல தோன்றும். வழக்கம் போல திராவிட மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சரிவை சந்தித்துள்ள பாஜக, மேற்கு வங்காளத்தில் வெற்றி பெறும் முனைப்பில் இருந்தது. அதிக அளவிலான பிரச்சார கூட்டங்கள், மோடியின் நேரடி விசிட் என மேற்கு வங்கத்தில் பெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்தது பாஜக.


                                        


இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டதைவிடவும் பிரச்சார கூட்டங்களில் அதிகம் காணப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 200 இடங்களை பிடிக்கும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார். பாஜகவின் இந்த தோல்வி அழுத்திச் சொல்லப்பட வேண்டிய ஒன்று! மோடியின் இந்திய ஜனநாயக முறைப்படி, இந்திய தேர்தல் ஆணையம் தனியொரு ஆணையமாக செயல்பட்டதாக சொல்லப்பட்டாலும், மோடியின் தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்டு வருகிறது. 


பண்டைய காலத்தில், வெற்றிபெற்ற அரசர் குதிரையை அவிழ்த்துவிட்டு அஷ்வமேத யாகத்தை நடத்திய பழக்கம் இருந்தது. மோடி இந்த யாகத்தை நடத்தவில்லை. ஆனால், மோடியும் அமித் ஷாவும் கோவிட் 19-ஐ அதிகப்படுத்தி அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். ஏனெனில் அதன் மூலமாகவே அவர்களால் பேரணிகளை நடத்த முடிந்தது. மம்தா பானர்ஜி தனது வெற்றியை தொடர்ந்து, வங்காளம் இந்தியாவைக் காத்தது எனச் சொல்லியிருக்கிறார். இந்த நேரத்தில் இதை ஒரு வாய்மொழி பாணி சமாதானமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். இது மம்தா பானர்ஜிக்கான வெற்றி என்று எடுத்துக்கொள்வதை விடவும், பாஜகவுக்கும், பாஜகவின் பிரித்தாளும் நிலைக்கு எதிரானதாகவும் எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும். இப்போது நடக்கும் அதர்மம் மற்றும் அசத்தியத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள நாடு போராடியாக வேண்டும் என்பதே உண்மை. இந்த இருள் சூழந்த அரசியல் காலத்தில் வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி என்பது மிகச்சிறு நம்பிக்கை கீற்றுதான்.


கட்டுரையில் இருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களாகும். கட்டுரையின் உட்கருத்துக்களுக்கு ABPநாடு பொறுப்பேற்காது.