Video viral: மும்பையில் ரயில்வே ஸ்டேசனுக்குள் ஆட்டோவைச் ஓட்டிச் சென்ற ஓட்டுநரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து வெளியேற்றியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சாலை விதிகள் என்பது அனைவருக்குமானது. அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் பலரும் அதனை கடைபிடிப்பது கிடையாது. அதேநேரத்தில் சாலை விதிகளை மீறும் போது பலரும் கூறுவது எனக்கு நேரம் ஆகிவிட்டது, மிகவும் அவசரமாக சென்று கொண்டு இருக்கிறேன் என்பது தான். அதிலும் குறிப்பாக நாம் உள்ளூர் வாசிகளாக இருந்தால் நமது ஊர் தானே நம்மை யார் கேடகப் போகிறார்கள், என்ன ஆகிவிடும் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருப்பவர்கள் பலர். அதிலும் குறிப்பாக அருகில் உள்ள இடத்திற்கு தானே செல்கிறேன், நண்பனின் வீட்டிற்க்கு தானே செல்கிறேன், குழந்தையை பள்ளியில் விடத்தானே செல்கிறேன், அதற்கெல்லாம் எதற்கு ஹெல்மட் என இருப்பவர்கள் ஒரு ரகம்.
வாகனத்தினை சாலையில் ஓட்டுவதோடு மட்டும் இல்லாமல் சாலையை ஒட்டியுள்ள நடைபாதையில் ஓட்டி விபத்துகளை உண்டாக்குபவர்களை எண்ண சொல்வது. அப்படித்தான் ஒருவர் தனது ஆட்டோவை ரயில்வே பிளாட் பாராத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். இவரை மடக்கிப் பிடித்து பொது மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மும்பை குர்லா ரயில் நிலையத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தினை பலரும் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் மும்பை காவல் தூறை மற்றும் மும்பை ரயில்வே நிர்வாக சமூக வலைதளப் பக்கங்களை டேக் செய்தும் புகார் செய்து வருகின்றனர். ஒரு சிலர் குர்லா ரயில் நிலையத்தில் இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மும்பை காவல் துறை ரயில் நிலைத்திற்குள் ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.