மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பக வன பகுதியில் இளைஞர்கள் புலிக்கு மிக அருகில் சென்று வீடியோ எடுத்தது பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் டிவிட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு வனதுறை  அதிகாரி  பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று டிவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார்.


”நல்லது; எப்படியோ உயிர்பிழைச்சிடீங்க.” என்று சிலரும், ஏன்? இந்த வேண்டாத வேலை என்று சிலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.


ஒரு வீடியோவில், அடந்த வனப்பகுதிக்குள், புலி நடமாடி கொண்டிருக்கிறது. அந்த வழியாக காரில் சென்ற இளைஞர்கள், காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி புலி செல்வதை வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அவர்கள் புலி நடந்து செல்லும்போது, பின்னாடியே சென்று அருகில் வீடியோ எடுத்துள்ளனர். 






புலி மெல்ல சாலையை கடந்து சென்றுவிட்டது.


இது தொடர்பாக வனதுறை  அதிகாரி  பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) தனது டிவிட்டர் பதிவில், விலங்குகள் தொந்தரவுகள்/ அச்சுறுத்தல்களை எப்போதும் விரும்பாது. புலியும் அப்படிதான். அவர்களை தூரமாக இருந்தே ரசிக்கலாம். எப்போதும் இப்படி விலங்குகள் அருகில் செல்வதை தவிர்க்கவும்; நண்பர்களே! இதுபோல் ஒருபோதும் செய்யாதீர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


 






வன உயிர்கள் என்றாலே பெரும்பாலானோருக்கு ஆச்சரியமும் பிரம்மிப்பும் இருக்கும். காடுகளில் உள்ள உயிரினங்களை காணும்போதும் நம்மை அறியாமலே அதிக உற்சாகம் கொள்வோம்; அல்லது அதீத அச்சம் வரும். சிலரோ ஆர்வத்தில் விலங்களுடன் ஒரு கிளிக் செய்ய, அல்லது விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை வீடியோ எடுக்க முயற்சி செய்வார்கள். இது மிகவும் ஆபத்தானது. காட்டில் உள்ள விலங்குகள் மூர்க்கமாக, அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.






இதுகுறித்து சற்று சிந்தித்தால் நமக்கு புரியும்; விலங்குகள் தங்களுடைய வாழ்விடத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவர்கள் இடத்தில் புதிதாக நாம் செல்வது அவர்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் மிகுந்ததாக இருக்கும். விலங்களை அவர்களது இயல்பிலேயே தூரமாக இருந்து பார்த்து ரசிக்க பழக வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளோம்.