பொதுவாக உணவு தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவில் ஒரு விதமான ஆச்சரியமான அல்லது வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்பட்டால் அதை பலரும் பார்த்து மகிழ்வார்கள். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உணவு தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. இப்படி அந்த உணவு திடீரென்று வைரலாக காரணம் என்ன?


இந்த உணவு தொடர்பாக உணவு தொடர்பாக பதிவிடும் பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவிலேயே முதல் முறையாக 2 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கத்துடன் கூடிய மோமோஸ் பரிமாறப்படுகிறது. இந்த மோமோஸூடன் ஆரஞ்சு புதினா மோஜிட்டோ மற்றும் மூன்று வகை சட்னி உள்ளிட்டவை பரிமாறாப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் அந்த மோமோஸ் எப்படி இருக்கும் என்ற வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. 


 






இந்த வீடியோவை தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த உணவிற்கு பாகுபலி கோல்டன் மோமோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோமோஸ் மும்பையில் உள்ள மெஸ்ஸி அடா என்ற கடையில் விற்கப்படுகிறது. இந்த கோல்டன் மோமோஸின் விலை 1299 ரூபாயாக உள்ளது. இது 6-9 பேர் சாப்பிட கூடிய அளவு அமைந்துள்ளது. இந்த மோமோஸை முன்பதிவு செய்யும் வசதியும் அந்தக் கடையில் உள்ளது. எனவே நீங்கள் மும்பை இருந்தால் அல்லது மும்பைக்கு போகறீர்கள் என்றால் இந்த கடையில் மோமோஸ் நிச்சயம் சாப்பிடுங்கள். 


மேலும் படிக்க: சுற்றிலும் வெள்ளம்.. பாத்திரத்தை படகாக்கி திருமணத்தை நடத்திய ஜோடி..