சிறுத்தை.. வனத்தின் கம்பீர விலங்குகளில் ஒன்று. அதன் வேகமும் வேட்டையாடும் விவேகமும் ஆச்சர்யமானது. சிறுத்தைகளுக்கு மான், காட்டெருமை மட்டுமல்ல வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் கூட பிடித்த உணவு தான். வனத்தை மனிதன் ஆக்கிரமிக்கும்போது சிறுத்தைகள் வெளிவந்து ஆடு, மாடு, நாய் என வேட்டையாடத் தொடங்கும்.


சிறுத்தைகள் வேட்டையில் மாஸ்டர்தான். அப்படியொரு சிறுத்தை அண்மையில் மரத்தின் மீது ஏறி ஒரு குரங்குக் குட்டியை கபளீகரம் செய்தி வீடியோவுடன் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.


மொத்தம் 31 விநாடிகள் மட்டுமே பதிவாகியுள்ள அந்த வீடியோ சிறுத்தையின் வேட்டைத் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதில் சிறுத்தை ஒரு மரத்தின் மீது சற்றும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் பதுங்கி பதுங்கி ஏறுகிறது. பின்னர் அங்கிருந்து பக்கத்து மரத்தை நோட்டம்விடுகிறது. கவனத்தைக் குவித்து குறிபார்த்து அந்த மரத்திற்கு தாவி குட்டியை வாயில் கவ்விக் கொள்கிறது. அந்த மரத்தின் உச்சியிலிருந்து பாராசூட் போல் பதனமாக கீழே லேண்ட் ஆகிறது. இதற்குள்ளதாகவே அந்தக் குட்டிக் குரங்கு உயிரிழந்துவிட்டது. பின்னர் தனது இரையுடன் அந்த சிறுத்தை அங்கிருந்து நடையைக் கட்டுகிறது. நமக்கு குட்டிக் குரங்கு என்று வருத்தமாக இருக்கலாம் ஆனால் அதுதான் கானகத்தின் நியதி. இந்தக் காட்சி மத்தியப் பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பன்னா பன்னா புலிகள் காப்பகமானது மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகமானது 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1994ம் ஆண்டு இது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரமானது இதனுடைய வைர சுரங்கத்திற்கும் அறியப்பட்டது. இந்நகரத்தின் சிறப்புமிக்க இந்து மற்றும் இஸ்லாமிய கலைநயமிக்க கோயில்களும், மசூதிகளும் காணப்படுகின்றன. இந்த இடமானது கன்னியாகுமரியிலிருந்து தொடங்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது முடிவுக்கு வருகிறது. இதற்கு வடக்கு பக்கம் கங்கைச் சமவெளிப்பகுதியானது தொடங்குகிறது. கென் நதியானது இந்த புலிகள் காப்பகத்தின் நடுவில் ஓடுகிறது. இந்த நதியானது காப்பகத்தினுள் 55 கி.மீ ஓடுகிறது. இந்தக் காப்பகத்தில் வேங்கை, காட்டு நாய், ஓநாய், காட்டுப்பூனைகள், கரடிகள் நீலமாடு, சிங்கார மற்றும் பலவகையான மான்வகைகளம் காணப்படுகின்றன.


இங்கு பலவகையான ஊர்வன மற்றும் பறவை இனங்களும் காணப்படுகின்றன. இந்த இத்திற்கு செல்வதற்கு கஜிராவோ விமான நிலையத்திலிருந்து செல்லலாம். மேலும், சத்னா மற்றும் மதுலா ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.


வீடியோவைக் காண:






இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் சிறுத்தையின் வேட்டைத் திறனைக் கண்டு வியந்து வருகின்றனர். கூடவே குரங்குக்குட்டி தப்பித்துவிடாதா என ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். வலியதுதானே பிழைக்கிறது என்றும் கமெண்ட் செய்கிறார்கள்