Watch Video | ட்ரைவரே இல்லாம வண்டு ஓடும்.. ஆனா இப்படி.. மஹிந்திரா நிறுவனரின் ட்வீட் வைரல்..!
டிரைவர் இல்லாமல் ஓடும் பைக் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுகள் எப்போதும் வைரலாவது வழக்கம். அவருடைய பதிவுகளை பார்ப்பதற்கு என்றே பலரும் ரசிகர்களாக உள்ளனர். அந்தவகையில் தற்போது அவர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்ன?
அந்த வீடியோ பதிவில் உள்ள நபர் ஒருவர் ஓட்டுநர் இல்லாமல் செல்லும் பைக் ஒன்றில் தனியாக சென்று கொண்டிருக்கும் படி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவை செய்துள்ள பெண் ஒருவர் தன்னுடைய பதிவில்,"எலோன் மஸ்க்: இந்தியாவில் டிரைவர்கள் இல்லாத வாகனங்களை கொண்டு வர திட்டம் என்று கூறுகிறார். ஆனால் இந்தியாவில்" என்று கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Love this…Musafir hoon yaaron… na chalak hai, na thikaana.. https://t.co/9sYxZaDhlk
— anand mahindra (@anandmahindra) October 20, 2021
அவரின் பதிவை ஆன்ந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பதவில் மேற்கொள் காட்டி ஒரு பதிவை செய்துள்ளார். அவரின் பதிவிற்கு பதிலாக ஒருவர் தன்னுடைய பதிவை செய்துள்ளார். அதில், "இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் எப்போது டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் முழுமையான தான் இயங்கி காரை உற்பத்தி செய்ய உள்ளது?" என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
when is Mahindra coming up with fully automated cars ?
— KABIR (@kabir_shelby) October 20, 2021
Most talented person in India ।
— Rishabh yadav (@socialistrishab) October 20, 2021
Most talented person in India ।
— Rishabh yadav (@socialistrishab) October 20, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ‛பெட்ரோல் லிட்டர் ரூ.200 ஐ தொட்டால் பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -அசாம் மாநில பாஜக தலைவர்!





















