மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரியில் கடைவீதியில் வெள்ளிக்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த கட்டடத்தில் இருந்து பெரும் புகை மூட்டம் வெளியேறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாலை 4.30 மணியளவில் அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் பின்புறம் உள்ள டி.என்.நகரிலிருந்து தீ பரவியுள்ளது.


 






விபத்தையடுத்து, 85 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜம்போ டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலிலும் தீப்பிடித்தது.


சம்பவ இடத்தில் ஏற்பட்ட லெவல்-2 தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து ஏற்பட்ட வளாகம், குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான பல உயரமான கட்டிடங்களால் சூழப்பட்டிருப்பதால், தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவில் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.


 






மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தீ பரவியிருப்பதால் அசாம்பாவிதங்களை தவிர்க்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும், தீ விபத்துகள் கவனக்குறைவு காரணமாகவே நடைபெறுகிறது. எனவே, இவற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்துள்ளன.


இதேபோல, சமீபத்தில், மும்பை பவாயில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, அந்த விபத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண