நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் சமயத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தேசிய கீதத்தை பாடி வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவர்கள் தேசிய கீதம் பாடியிருப்பது நாட்டு பற்றை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.






இந்திய ராணுவத்தின் Northern Command இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், மூவர்ண கொடியை ஏந்திய சிறுவர்கள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் தேசிய கீதத்தை பாடியுள்ளார். குழந்தைகள் ஒரு கையால் சல்யூட் அடித்தும், மற்றொரு கையில் சிறிய மூவர்ணக் கொடியை ஏந்தியவாறும் ஜன கண மன பாடுவதை வீடியோவில் காணலாம். 


"காஷ்மீரில் இருந்து அழகான காணொளி" என்று இந்திய இராணுவம் "ஹர் கர் திரங்கா" என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளது. குழந்தைகளின் அப்பாவித்தனம் ட்விட்டரில் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது. "மிகவும் இனிமையாக உள்ளது. குழந்தைகளின் அப்பாவி முகம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.






75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 ஆவது சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் அரசு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


"இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை, மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டுவதும், இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதே ஆகும்" என அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில், இந்திய கடலோர காவல்படையினர் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் பங்கேற்று, நீருக்கடியில் தேசிய கொடியை ஏற்றினர். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் ட்விட்டரில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில் இந்திய கடலோர காவல்படை வீரர் ஒருவர் கடல் படுகையில் கொடியுடன் இருப்பதைக் காணலாம்.


'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தின் ஓர் அங்கமாக மக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடியுடன் தங்கள் செல்ஃபிகளையும் பதிவேற்றலாம். இணையதளத்தில் இருந்து 'ஹர் கர் திரங்கா' சான்றிதழையும் பெற்று கொள்ளலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண