"சனாதன விழுமியங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஆன்மீகம்" சொல்கிறார் துணை ஜனாதிபதி!
பல தாக்குதல்களுக்கு பிறகும் சனாதன விழுமியங்கள் வழியாக ஆன்மீக சக்தியை பாதுகாத்து வந்ததாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்கு இடையிலும் பாரதம் தனது ஆன்மீக சக்தியை சனாதன விழுமியங்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். ஆன்மீக சக்தியை இணைக்கும் அமைப்பாக கோயில்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"சனாதன விழுமியங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட ஆன்மீகம்"
கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ஸ்ரீ நவக்கிரக தீர்த்த க்ஷேத்ராவில் இன்று 'சுமேரு பர்வதம்' தொடக்க விழாவில் பேசிய அவர், "நமது ஆன்மீக சக்தியை நாம் பாதுகாத்து அதை நாம் வளர்த்திருக்கிறோம். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. நிலையான ஞானம் ஒளிரும் இடம் 'பாரதம்'. இங்குதான் மனிதகுலம் அமைதியைக் காண்கிறது" என்றார்.
Anekantavada, the ancient doctrine of multiple viewpoints, provides a framework for global diplomacy and embodies the spirit of expression and dialogue.
— Vice-President of India (@VPIndia) January 16, 2025
Much of humanity’s problems arise when expression is compromised, and dialogue turns negative. The right to expression has… pic.twitter.com/IJO17Eofqr
தொடர்ந்து பேசிய அவர், "நமது நாகரிகம், 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நமது நெறிமுறைகள், நமது அறிவுச் செல்வம், ஞானச் செல்வம் ஆகியவை பல யுகங்களின் ஞானத்தைக் கொண்டுள்ளது" என்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் என்ன பேசினார்?
நன்னெறி நடத்தையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், நன்னெறி தரநிலைகள் நமது கலாச்சாரத்தில் பொதிந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
நமது மத, புனித இடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல என்றும், அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் எனவும் தெரிவித்தார். நமது புனித இடங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்மிக்க மையங்களாக உள்ளன என்றும் ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்





















