Vice President Election 2022 Live: குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு

குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வான நிலையில், நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடக்கிறது

இரவாதன் Last Updated: 06 Aug 2022 08:55 PM
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில், அரசியலில் பொதிந்துள்ள கொள்கைகள் உங்கள் காலத்தில் நிலைநிறுத்தப்படும் என நம்பிகிறேன் என தெரிவித்துள்ளார். 

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!

அதிமுக சார்பில் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு வாழ்த்துகள் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.  

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!

துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு

இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக,பாஜக-வின் கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு

இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக,பாஜக-வின் கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் வாக்களித்தனர்..!

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

வாக்களித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...!

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோர் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.





குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்த மத்திய அமைச்சர்கள்..!

துணை ஜனாதிபதி தேர்தலில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.





பிரதமர் மோடி வாக்களித்தார்..!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை செலுத்தினார். 





முடிவுகள் எப்போது..?

மாலை 5 மணிக்கு தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட இருக்கிறது. 

யார்..? யார்..? போட்டியாளர்கள்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சி சார்பில் மார்கரேட் ஆல்வா போட்டியிடுகின்றனர். 

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.

Background

பதவிக்காலம் முடிவு


ஏற்கனவே குடியரசு துணைத் தலைவராக பதிவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.


 


வேட்பாளர்கள்


இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் முன்பு மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்ய நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 790 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்.


வாக்காளர்கள்


மாநிலங்கள் அவையில் நியமன எம்.பி.க்களாக உள்ள 12 பேர் உட்பட 245 பேரும், மக்களவையில் நியமன உறுப்பினர்களாக உள்ள 2 பேர் உட்பட 545 பேரும் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். குடியரசு தேர்தலை போல எம்.எல்.ஏ.க்களுக்கு இதில் வாக்கு கிடையாது. வாக்கு மதிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும், எந்தக் கட்சியின் சின்னமும் இருக்காது.


இன்றே முடிவு தெரியும்


இன்று இந்த வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்தமுள்ள 790 வாக்குகளில் பாதியான 395 வாக்குகளுக்கு மேல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


யாருக்கு வெற்றிவாய்ப்பு?


இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.