UNESCO உலக பாரம்பரியத் தளமான இத்தாலியில் உள்ள பைசாவின் சாய்ந்த கோபுரத்தை விட சாய்வாக உள்ள வாரணாசி கோயில் கோபுரத்தின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னாள் நார்வே தூதரக அலுவலர் எரிக் சொல்ஹெய்ம், ஒன்பது டிகிரி வரை சாய்ந்துள்ள வாரணாசியின் ரத்னேஷ்வர் கோயிலின் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். மணிகர்ணிகா காட் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 'காசி கர்வத்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கோயில் பற்றி தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலி நாட்டின் பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலகப் புகழ்பெற்று, உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த கோபுரம் தான் உலகின் சாய்ந்த கோபுரம் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்ஒபோது வாரணாசி கோயில் கோபுரத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பைசா கோபுரத்தின் கட்டுமானப் பணி கி.பி. 1173ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதாகும். 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இக்கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது.
எனினும் அக்கோபுரம் இதுவரை கீழே விழாத நிலையில் பெரும் அதிசயமாகக் கருதப்படுகிறது. இக்கோபுரம் விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு இக்கோபுரம் நான்கு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்