சமூகவலைதளங்களில் எப்போதும் ஒரு சில வித்தியாசமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாக தொடங்கியுள்ளது. முதியவர் ஒருவர் தன்னுடைய தலைக்கு மேல் நடமாடும் ஃபேன் ஒன்றை வைத்து செல்வது வேகமாக வைரலாகி வருகிறது. 





அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தின் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லல்லு ராம். இவர் தினமும் தெருக்களில் பூ விற்பனை செய்து வருகிறார். இவர் அன்மையில் செய்த கண்டுபிடிப்பு ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண இப்படி ஒரு கண்டிபிடிப்பை செய்ததாக கூறியுள்ளார். இவருடைய தலையில் ஹெல்மெட்டில் ஒரு விசிறி சேர்த்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஒரு சூர்யசக்தி உடன் இயங்கும் சோலார் பேனல் இடம்பெற்றுள்ளது. 


 






சூர்ய ஒளிக்கு ஏற்ப அந்த ஃபேனின் வேகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த முதியவருக்கு அதிக வெப்பத்தால் ஏற்பட்ட உடல் பிரச்னையை தீர்க்க இப்படி ஒரு நடமாடும் ஃபேனை செய்ததாக கூறியுள்ளார். இவர் இந்த ஃபேன் உடன் தெருக்களில் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை வியந்து பார்த்து வருகின்றனர். ஒருசிலர் இந்த முதியவரின் கண்டுபிடிப்பை பாராட்டி வருகின்றனர். 


 






 






 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு... காரணம் ஏன்? தமிழகத்தின் நிலை என்ன?