உத்திரப்பிரதேசத்தின் முசாஃபர் நகரில் 16 வயது சிறுமி கடைக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தெரிய வந்ததை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரில் அந்த சிறுமி கடைக்கு சில பொருட்கள் வாங்கச் சென்றதாகவும் அங்கே கடைக்காரர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அதனை படமெடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநில முசாஃபர்நகரின் புர்காசி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 






முன்னதாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார். 


அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல்  மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது. உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. 


உத்தர பிரதேசம் தொடர்ந்து பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5  மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அதேபோல், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா பிரயாக்ராஜின் சிரத் தொகுதியில் போட்டியிடுகிறார்.