இந்து - முஸ்லிம் காதல்.. மரத்தில் தொங்கிய ஜோடி.. அநியாயமா கொன்னுட்டாங்க!

காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

உத்தரப் பிரதேசத்தில் காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

Continues below advertisement

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்:

சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து வருவதுதான் காதல். உலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே காதல்தான். ஆனால், பல சமயத்தில் காதலுக்கு பல்வேறு வகையான ரூபத்தில் எதிர்ப்புகள் வந்துள்ளன. என்னதான் எதிர்ப்பு வந்தாலும், காதலுக்காக தங்களின் உயிரையும் கொடுக்க சிலர் தயங்குவதில்லை.

அந்தமாதிரியான சம்பவம் ஒன்றுதான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. பிஹுரா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா பானோ. இவருக்கு வயது 18. அருகில் உள்ள பஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ். இவருக்கு வயது 21. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள், நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவர்தளை திருமணம் செய்யவிடாமல் இவர்களின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இந்த சூழலில், இந்த ஜோடி சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களது குடும்பத்தினர் தந்த அழுத்தத்தின் பேரில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா?

இதைத் தொடர்ந்து, சூரஜின் குடும்பத்தினர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். அவருக்கு திருமணமும் நடந்துள்ளது. இந்த நிலையில், திருமணம் ஆன சில நாள்களிலேயே சூரஜ் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி டி. கே. சிங் விரிவாக பேசுகையில், "இருவரும் அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் வசித்து வந்துள்ளனர். நிஷா பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ​​சூரஜ் தனது தந்தையுடன் விவசாயத்தில் வேலை செய்து வந்தார்.

அவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதே மாந்தோப்பு பகுதியில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் நிஷாவின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், சூரஜின் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரஜ் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்தார். குடும்பத்தினர் தீவிரமாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை அதிகாலையில், வயல்களுக்குச் சென்ற சில கிராமவாசிகள், ஒரு மா மரத்தில் ஜோடியின் உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முழுமையான விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக தெரிகிறது. ஆனால், கொலைக்கான சாத்தியக்கூறுகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என காவல்துறை தரப்பு கூறுகிறது. அனைத்து கோணங்களும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் இரண்டு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்களை உள்ளடக்கியது என்பதால், கிராமத்தில் சிறிது பதற்றம் நிலவுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola