ஹார்முஸ் ஜலசந்தியில், கிட்டத்தட்ட 4 மாத கால நெருக்கடிக்குப் பின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதாகத் தெரிகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இருந்தாலும், இந்த பாதையை திறப்பது மட்டும் உடனடியாக இயல்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்காது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகள், எந்த சரக்குகளும், கப்பல்களும் முதலில் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்பதை பார்க்க இப்போது காத்திருக்கின்றன. குறிப்பாக இந்தியாவிற்கு, எது முதலில் வந்து சேரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continues below advertisement

முதலில் எல்பிஜியா அல்லது கச்சா எண்ணெயா.?

ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை திரும்பியதும், எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கு ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன், எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் முதலில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எல்பிஜி-க்கு ஏன் முன்னுரிமை.?

இந்தியாவின் பெரும்பாலான எரிவாயு மற்றும் எண்ணெய், வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஹார்முஸில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, எல்பிஜி விநியோகம் குறிப்பாக பாதிக்கப்பட்டதால், நாடு முழுவதும் விலை உயர்வு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியன் ஆயில் நிறுவனம், எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்காக கப்பல்களுக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது. அந்நிறுவனம், ஒரு விஎல்ஜிசி (VLGC) கப்பலையும், பெரிய எண்ணெய் டேங்கர்களையும் வாடகைக்கு எடுத்துள்ளது. எல்பிஜி சரக்குகள் ஜூன் மாத இறுதிக்கும் ஜூலை முதல் வாரத்திற்கும் இடையில் ஏற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

11 நாட்களில் என்ன நடக்கும்.?

ஊடக அறிக்கைகளின்படி, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்ட உடன், முதலில் அங்கு சிக்கியுள்ள கப்பல்கள் விடுவிக்கப்பட்டு, பின்னர் புதிய சரக்குகள் ஏற்றப்பட்டு, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும். 10 முதல் 11 நாட்களுக்குள், கடல்வழிப் போக்குவரத்து வேகமாக அதிகரிக்கும் என்றும், எரிசக்தி சரக்குகளின் இயக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், காப்பீட்டு ஒப்புதல்கள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கப்பல் போக்குவரத்து தாமதங்கள் காரணமாக, முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப அதிக காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்தியா எவ்வளவு பயனடையும்.?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும், எல்.பி.ஜி தேவையில் ஏறக்குறைய 90 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. அதனால், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவது இந்தியாவிற்கு மிகவும் பயனளிக்கும். எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெயின் சீரான விநியோகம், உள்நாட்டுச் சந்தையின் சிரமங்களை குறைக்கும். மேலும், சர்வதேச எண்ணெய் விலைகள் மீதான அழுத்தம் தணியும். இது, இந்தியாவின் இறக்குமதி செலவை குறைக்க வாய்ப்புள்ளது. சாமானிய மக்களின் பணப்பற்றாக்குறை விரைவில் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.