US Visa: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான பதிவு கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எச்1பி விசா:
அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் எச்1பி விசா.
இதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல. ஒருவேளை எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல, எல்-1 விசா ஒரு சர்வதே நிறுவனத்தில் நிர்வாக அல்லது நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களால் பயன்படுத்தபடுகிறது. சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டாலும் இதே விசா பொருந்தும்.
விசாக்களுக்கான கட்டணம் உயர்வா?
இந்த நிலையில், பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் 780 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாயில் 64,731 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.38,174 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.64,731 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 1,385 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1,14,939 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 38,174 ரூபாயாக இருந்த நிலையில், ரூ.1,14,939 ஆக உயர்த்தியுள்ளது அமெரிக்கா. அதேபோல, EB-5 விசாக்களுக்கான கட்டணம் 11,160 டாலர் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.9,26,153 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.3,04,983 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.9.26 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால், அடுத்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் 157 மில்லியன் டாலர் (ரூ. 1,302 கோடி) செலவாகும். வெளிநாட்டு முதலீட்டளார்கள் அமெரிக்கா வந்து பணிபுரிய EB-5 விசாவை அமெரிக்கா வழங்கி வருகிறது. விசாக்களுக்கான கட்டண உயர்வால் இந்தியர்கள் உட்பல பலருக்கு அதிர்ச்சிக்கு அளித்துள்ளது.
மேலும் படிக்க
கடனில் தள்ளாடுகிறதா இந்தியா? மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!