இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யூபிஐ முறையிலான பேமெண்ட்-ஐ பயன்படுத்தி வந்தாலும் பல இடத்தில் இண்டர்நெட் இணைப்பு சரியாக இல்லாத நேரத்தில் பேமெண்ட் செய்ய முடியாமல் போகிறது. உதாரணமாக அண்டர்கிரவுண்டில் இருக்கும் மெட்ரோ ஸ்டேஷன், விமானம், தொலை தூர கிராமம், காட்டில் இருக்கும் ரெசார்ட், மலை பிரதேசம் என பல இடத்தில் இண்டர்நெட் சேவை முழுமையாக கிடைக்காத காரணத்தால் யூபிஐ பேமெண்ட் செய்ய முடியாமல் உள்ளது.

Continues below advertisement

இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பேமெண்ட் அமைப்பான NPCI, முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் PoS டெர்மினல்களுக்கு விரைவில் ஒரு முக்கியமான நிதி பரிமாற்ற ஒப்புதல்களை வழங்க உள்ளது.

Continues below advertisement

இந்த ஒப்புதல் மூலம் மொபைல் போனில் இருக்கும் NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் 2000 ரூபாய் வரையிலான தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. பேமெண்ட் NFC மூலம் நடக்கும் காரணத்தால் இண்டர்நெட் இல்லாமல் பேமெண்ட் செய்ய முடியும், ஆனால் இதை செயல்படுத்த முதலில் வேலெட்டில் பணத்தை லோடு செய்ய வேண்டும்.

இது நாள் வரையில் கடைகளில் இருக்கும் PoS இயந்திரங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ வாயிலாக தான் பேமெண்ட் பெற்று வந்தது, தற்போது அளிக்கப்பட்டும் அனுமதி மூலம் NFC தொழில்நுட்பம் இனி முக்கிய பேமெண்ட் முறையாக மாறும்.

இதற்கு 2000 ரூபாய் வரையிலான கட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் நிதி திருட்டு, மோசடிகளும் தடுக்கப்படும். இந்த அனுமதிக்கு பின்பு PoS நிறுவனங்கள் NFC முறையிலான பேமெண்ட்க்காக புது அப்பளிகேஷனை உருவாக்க வேண்டும். இது யூபிஐ லைட் எக்ஸ் சேவையின் நீட்ச்சியாகும்.

2023ல் முதல் முறையாக NPCI முதல் முறையாக ஆப்லைன் பேமெண்ட் முறை கொண்டு வரப்பட்டது, இதன் பின்பு 2024 ஜனவரி மாதத்தில் தனிநபர்கள் இரண்டு பேருக்கு மத்தியில் அவர்களின் ஸ்மார்ட்போனில் இருக்கும் NFC மூலம் ஆப்லைன் பேமெண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது விற்பனையாளர்கள் மற்றும் மக்களுக்கும் மத்தியிலான PoS இயந்திரம் வாயிலான ஆப்லைன் பேமெண்ட் முறையை கொண்டு வர NPCI களமிறங்கியுள்ளது. இதற்கு முன்பு விற்பனையாளர்களின் NFC மூலம் இயங்கும் QR CODE, சவுண்ட் பாக்ஸ், ஸ்டிக்கர் மூலம் பேமெண்ட் செய்யும் வசதிகள் இருந்தாலும், முதல் முறையாக PoS மூலம் இயங்கும் சேவையை கொண்டு வர உள்ளது.