7வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர்! பார்ட்டிக்கு போன இடத்தில் விபரீதம்! காரணம் என்ன?
தபாஸ் என்ற மாணவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்து வந்தார்.

நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சட்ட மாணவர் ஒருவர் விழுந்து இறந்தார். இது தற்கொலை என போலீசார் சந்தேகிக்கின்றனர். காசியாபாத்தைச் சேர்ந்த அந்த மாணவர், தனது நண்பரின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள அந்த வளாகத்திற்குச் சென்றிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
Just In




இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தபாஸ் என்ற மாணவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்து வந்தார். சனிக்கிழமை, அவர் தனது நண்பர் ஒருவரின் ஏழாவது மாடியில் உள்ள பிளாட்டில் ஒரு விருந்தில் கலந்து கொள்ள நொய்டாவின் செக்டார் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸுக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, தற்கொலைக்குத் தூண்டியதாக நான்கு முதல் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தபஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரிடமிருந்து புகார் கிடைத்த பிறகு மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.