மணப்பெண் ஒருவர் திருமண மேடையில் துப்பாக்கியை எடுத்து சுடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒன்றும் தெரியாததுபோல் அமர்ந்திருந்த மாப்பிள்ளை
ஹத்ராஸில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து மணப்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 25 (9) பிரிவின் கீழ் ஹத்ராஸ் சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஹத்ராஸ் சந்திப்பு காவல்துறையின் பொறுப்பாளர் கிரிஷ் சந்த் கவுதம் கூறுகையில், துப்பாக்கி உரிமம் யாருடைய பெயரில் வழங்கப்பட்டது என்பதும் எப்.ஐ.ஆர்-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் உ.பி.யின் ஹத்ராஸில் மணமகன் ஒருவர் மணமகளின் அருகில் அமைதியாக ஒன்றும் தெரியததுபோல் அமர்ந்து இருப்பதாக எழுதி, அந்த வைரல் வீடியோவை பியூஷ் ராய் என்பவர் ட்விட்டரில் பதிவேற்றினார்.
துப்பாக்கியால் சுட்டு மணப்பெண்
போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தகவலின் படி, ஹத்ராஸின் சேலம்பூர் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த திருமணத்தின் போது மணப்பெண் இவ்வாறு துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார் என்று தெரிகிறது. வீடியோவில், அவர் திருமண மேடையில் மணமகனுடன் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அப்போது, ஒரு நபர் துப்பாக்கியை அந்த பெண்ணிடம் கொடுக்கிறார். மேலும் துப்பாக்கியை வாங்கிய அவர், மேலே பார்த்து காற்றில் நான்கு முறை சுட்டுவிட்டு, துப்பாகியை திருப்பி கொடுத்துவிட்டார்.
மணமகள் மீது வழக்குப்பதிவு
தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, காவல்துறையின் பொறுப்பாளர் கிரிஷ் கூறுகையில், “ஒரு மணமகள் திருமண மேடையில் இருந்து துப்பாக்கியால் சுடும் வீடியோ வைரலாகியுள்ளது. மணமகள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது", என்று குறிப்பிட்டுள்ளார்.
50 ரூபாய் லெஹங்காவால் நின்ற திருமணம்
இதே போல ஒரு திருமண சம்பவத்தில், ஒரு மணப்பெண் தனக்கு விலை குறைவான லெஹங்கா வாங்கி கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் வைரலாகி இருந்தது. பிராஜ்புரா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளைக்காக வாங்கிய லெஹங்காவின் விலை வெறும் ரூ.50 மட்டுமே என்பதை அறிந்ததும் கோபத்தில் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். மறுபுறம், மணமகனின் குடும்பத்தினர், லக்னோவில் இருந்து பிரத்தியேகமாக 10,000 ரூபாய் மதிப்புள்ள லெஹங்காவை வாங்கியதாகக் கூறினர். இந்த ஜோடிக்கு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.