உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பீம் ஆர்மி ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.


இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்  அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலை, சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது. இதனைக் கண்டித்து நேற்று பீம் ஆர்மி ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலையின் முகத்தில் கருப்பு வண்ண பெயின்டைத் தெளித்து அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பீம் ஆர்மி ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அது தடியடியில் முடிந்தது.






இது குறித்து அம்பேத்கர் நகர் சின்ஹா கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் பெண் காவலரை தாக்கினர். அதனாலேயே போலீஸார் தடியடியில் ஈடுபட வேண்டிய சூழல் உருவானது. மாவட்ட நீதிபதி ஹரி சங்கர், அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்று முழங்கிய மாமேதை அம்பேத்கர். நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை என்று அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு உத்வேகம் கொடுத்துச் சென்றவர் அண்ணல்.