உலர் ரக ஷாம்பூக்கள் சாதாரண ஷாம்பூக்கள் போல மார்க்கெட்டில் அத்தனைப் பிரபலமில்லை என்றாலும் ஒருநாளில் பாத்ரூமில் அதிக நேரம் செலவிட விரும்பாதவர்கள் இந்த உடனடி ஷாம்புக்களான உலர்ரக ஷாம்பூக்களை நாடுவது உண்டு. இதற்காகவே பிரபல பிராண்டுகள் சில உலர் ஷாம்பூக்களையும் உற்பத்தி செய்கின்றன. ஏரோசல் உலர் ஷாம்பூ விற்கும் பிரபலமான பிராண்டான டவ் உட்பட பல ஷாம்பூக்கள், யூனிலீவர் பிஎல்சி நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என்று நியூஸ் ஏஜென்சியான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.


ஃபுட் அண்ட் ட்ரக் அத்தாரிட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நெக்சஸ், சாவ், ட்ரெசமே மற்றும் டிஐஜிஐ (Nexxus, Suave, Tresemmé, and Tigi) போன்ற பிராண்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.




யுனிலீவர் நிறுவனம் அக்டோபர் 2021-க்கு முன் தயாரிக்கப்பட்ட உலர் ரக ஷாம்ப்பூக்கள் அத்தனையும் திரும்பப் பெற்றுள்ளது. கனெக்டிகட்டில் உள்ள நியூ ஹேவனில் உள்ள வேலிஷ்யூர் என்ற பகுப்பாய்வு ஆய்வகத்தின் மூலம் அத்தகைய தயாரிப்புகளில் பென்சீன் இருப்பதைக் கண்டறிந்தை அடுத்து திரும்பப்பெறுதல் தொடங்கப்பட்டன என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.


ஜான்சன் & ஜான்சனின் நியூட்ரோஜெனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் கோ.வின் பனானா போட் மற்றும் பீர்ஸ்டோர்ஃப் ஏஜியின் காப்பர்டோன் (Johnson & Johnson’s Neutrogena, Edgewell Personal Care Co.’s Banana Boat and Beiersdorf AG’s Coppertone) மற்றும் ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரே-ஆன் ஆன்டிபெர்ஸ்பிரண்ட்கள் உட்பட பல ஏரோசல் சன்ஸ்கிரீன்கள்(Procter & Gamble Co.’s Secret and Old Spice and Unilever’s Suave) கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முகவர்களிடமிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. 


ஸ்ப்ரே-ஆன் ட்ரை ஷாம்பு ஒரு பிரச்சனையாக அடையாளம் காணப்படுவது இது முதல் முறை அல்ல. வேலிஷ்யூர் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து பிஅண்ட்ஜி ஏரோசல் தயாரிப்புகளின் முழு போர்ட்ஃபோலியோவையும் சோதனை செய்தது. பென்சீன் மாசுபாட்டைக் காரணம் காட்டி டிசம்பரில் அந்த நிறுவனம் அதன் பேண்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸஸ் உலர் ஷாம்புகளை (Pantene and Herbal Essences dry shampoos ) திரும்பப் பெற்றது.


"நாங்கள் கவனித்ததைப் பொறுத்தவரை, துரதிர்ஷ்டவசமாக, ஏரோசல் உலர் ஷாம்புகள் போன்ற பிற நுகர்வோர்-தயாரிப்பு வகைகள் பென்சீன் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படலாம், மேலும் இந்தப் பகுதியை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்" என்று வேலிஷ்யூர் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லைட்,  கூறியுள்ளார்.


பாத்ரூமில் அதிக நேரம் செலவிட விரும்பாதவர்கள் இந்த உடனடி ஷாம்புக்களான உலர்ரக ஷாம்பூக்களை நாடுவது உண்டு. ஏரோசோல்களில் உள்ள பிரச்சனை, பெரும்பாலும் கேன்களில் இருந்து அந்தப் பராமரிப்பு பொருட்களை ஸ்ப்ரே செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரா போன்ற அமைப்பில் இருந்து தோன்றியுள்ளது.


யுனிலீவர் தனது உலர் ஷாம்பூவை திரும்பப்பெறும் விஷயத்தில் இதைதான் காரணமாகக் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இந்தத் தயாரிப்புகளில் காணப்படும் பென்சீனின் அளவை நிறுவனம் வெளியிடவில்லை, இருப்பினும் அதிக எச்சரிக்கையுடன் அவற்றை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளது.


உணவு மற்றும் மருந்து அங்கீகரிப்பு (FDA) பரிசோதனையில், கண்டறியப்பட்ட அளவுகளில் திரும்பப்பெறும் பொருட்களில் பென்சீன் தினசரி வெளிப்பாடு மோசமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனாலும் பென்சீனின் வெளிப்பாடு லுகேமியா மற்றும் பிற இரத்த புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.


உலர் ஷாம்புகள் மற்றும் ஸ்ப்ரே-ஆன்கள்  புரோபேன் மற்றும் பியூட்டேன் போன்ற உந்துசக்திகளைக் கொண்டிருக்கின்றன. இவை கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோலியத்தை காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படுபவை. பென்சீன் என்பது பெட்ரோலியப் பொருட்களில் அறியப்பட்ட ஒரு பொருள் ஆகும். 


உலர் ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்களுக்கு பென்சீன் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்கிற வரம்பினை எஃப்டிஏ அமைக்கவில்லை என்றாலும், தயாரிப்புகளில் எந்தவொரு விஷப்பொருளோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளோ இருக்கக்கூடாது என்று அது கூறுகிறது.