Ukraine-Returned Students: உக்ரைன் இந்திய மாணவர்கள் இனி இந்த நாட்டில் படிக்கலாம்.. புது அறிவிப்பு.. முழு விவரம்

போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களில் ஒரு பகுதியினர் இனி உஸ்பெகிஸ்தானில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களில் ஒரு பகுதியினர் இனி உஸ்பெகிஸ்தானில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே இந்திய மருத்துவ சங்கம் (IMA) மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்குக் கடிதம் எழுதியது. 

அந்தக் கடிதத்தில், ’’உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, இந்தியாவில் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். 

மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும், ஒருமுறை மட்டும் சிறப்புத் தெரிவாக அவர்களின் மருத்துவக் கல்விக்கு இந்தியாவில் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்தது.

மத்திய அரசு நிராகரிப்பு

எனினும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வழிமுறைக்கு இடமில்லை என்று தெரிவித்த அரசு, மாணவர்களுக்குத் தளர்வு செய்து கொடுத்தால், அது இந்தியாவின் மருத்துப் படிப்புடைய தரத்தையே பாதிக்கும் எனவும் விளக்கம் அளித்தது. 


உஸ்பெகிஸ்தானில் சேர்ந்து படிக்கலாம்

இந்நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களில் ஒரு பகுதியினர் உஸ்பெகிஸ்தானில் சேர்ந்து படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் தில்ஷோத் அகாதோவ், இந்திய மாணவர்கள் உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான தற்காலிக சேர்க்கைக் கடிதத்தை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார். 

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''இந்தியத் தோழமைகளின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து, இந்திய மாணவர்களில் சிலரை உஸ்பெகிஸ்தான் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. எனினும் இந்த மாணவர் சேர்க்கைக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இதில் ஒரு பகுதி மாணவர்கள் மட்டும் தற்போது உஸ்பெகிஸ்தானில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

உலகின் மிகப்பெரிய சர்வதேச கல்வி முனையமாக மாற உஸ்பெகிஸ்தான் திட்டமிட்டுள்ளது'' என்று தில்ஷோத் அகாதோவ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola