திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.  


திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா, ஜனவரி 11 அன்று, திரிபுரா மருத்துவக் கல்லூரியில், வாயின் மேல் பகுதியில் சிஸ்டிக் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவனுக்கு அவரது நாசி சைனஸின் எலும்புகளில் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை செய்தார். 


அறுவை சிகிச்சை செய்த உடனேயே, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், “முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இன்று நான் எனது பழைய பணியிடத்தில் அதாவது திரிபுரா மருத்துவக் கல்லூரியில் ஒரு குழந்தைக்கு வாய்வழி சிஸ்டிக் லெஷன் அறுவை சிகிச்சை செய்தேன்.  அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பழைய சக ஊழியர்களின் முன்னிலையில், எல்லாம் முன்பு போலவே இருந்தது." என பதிவிட்டார்


 அகர்தலாவில் வசிக்கும் சுகந்தா கோஷ் என்பவரின் மகன் 10 வயது அக்சித் கோஷ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரண நலமுடன் இருக்கிறார் என்று முதல்வர் மேலும் கூறினார். "நான் ஒருபோதும் எனது தொழிலில் இருந்து அந்நியப்பட்டதாக உணரவில்லை, எனது முன்னாள் சக ஊழியர்களின் தோழமையையும் அர்ப்பணிப்பையும் அனுபவித்தேன்.", என்று அவர் மேலும் கூறினார். 


பல் மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அமித் லால் கோஸ்வாமியின் கூற்றுப்படி, திரிபுரா மருத்துவக் கல்லூரியில் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முதல்வர் இந்த விஷயத்தில் நிபுணராகக் கலந்து ஆலோசித்து, சிஸ்டிக் லெசியன் மார்சுபலைசேஷன் மற்றும் சிகிச்சை முறையைத் திட்டமிட்டார்.






"டாக்டர் சாஹா தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தது," டாக்டர் கோஸ்வாமி இது குறித்து மேலும் கூறுகையில், ”தற்போதுள்ள பற்கள் மற்றும் அவற்றின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்காத வகையில் முதல்வர் அறுவை சிகிச்சையை திட்டமிட்டுள்ளார். வாயில் உள்ள நீர்க்கட்டி காரணமாக நோயாளி அசௌகரியமாக உணர்ந்தார், இது அவரது வழக்கமான உணவை உட்கொள்வதில் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது, எனவே அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தார்.  அதேபோல் மிகவும் பிஸியாக இருந்த போதிலும் முதல்வர் அறுவை சிகிச்சையை அவரது தலைமையில் சிறப்பாக செய்து முடித்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.