சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் மீட்டுள்ளதாக, எம்பி பிரதாப் சந்திர சாரங்கி ஒடிசா முதல்வர் மோகன் மாஜியிடம் தெரிவித்தார்.


மேற்குவங்க சென்ற ஒடிசா சுற்றுலா பயணிகள்:


ஒடிசாவைச் சேர்ந்த சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் மேற்கு வங்க மாநிலம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள காதிகாவுக்குச் சென்றதாக  கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் , அவர்கள் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி. பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான சுற்றுலா பயணிகள், வீடியோ வெளியிட்டு , காப்பாற்றும்படி உதவி கோரினர்.


சுற்றுலா பயணிகள் மீட்பு:


 இதனால் பெரும் பரபரப்பானது. ஒடிசா மாநில அரசு உடனடியாக , இந்த விவகாரத்தில் தலையிட்டது.


ஒடிசா எம்பி பிரதாப் சந்திர சாரங்கியும், இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது.இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மேற்கு வங்க மாநில காவல்துறையினரால் மீட்கப்பட்டனர். 


இதையடுத்து, பத்திரமாக மீட்கப்பட்ட தகவலை ஒடிசா முதல்வர் மோகன் மாஜியிடம் பிரதாப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், ஒடிசா மாநில செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருப்பதாவது, “அவர்கள் எங்களை தடுத்து நிறுத்தி, பேருந்துகளின் கண்ணாடியை சேதப்படுத்தினர். போலீசார் எங்களை மீட்டனர். நாங்கள் இப்போது காவல் நிலையத்தில் இருக்கிறோம்," என்று சுற்றுலாப் பயணிகளில் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


பழிக்கு பழி?


இந்நிலையில், எதற்காக ஒடிசா மாநில சுற்றுலா பயணிகளின் மீது மேற்கு வங்கத்தின் மேதினிபூர் மாவட்டத்தின் உள்ளூர் மக்கள் தாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.


வங்காளதேச நாட்டில் போராட்டம், கலவரம் ஏற்பட்ட சூழ்நிலையில், ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர், பத்ரக் மற்றும் கேந்திரபாடா ஆகிய மாவட்டங்களில் சில பெங்காலி மொழி பேசும் மேற்கு வங்க மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்திருக்கின்றனர். அப்போது, கட்டுமான தொழிலாளர்களை வங்காள தேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என நினைத்து, ஒடிசா மாநில மக்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.


அதனால், பழிக்கு பழி வாங்கும் வகையில் ஒடிசா மாநில மக்களை மேற்கு வங்க மாநில மக்கள் சிலர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், மேற்கு வங்க சுற்றுலா பயணிகளை பத்திரமாக எல்லைப் பகுதிவரை கொண்டு விட்டுவர மேற்குவங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


இரு மாநில அரசுகளின் தலையீட்டை தொடர்ந்து, இரு மாநில மக்களுக்கும் இடையேயான பிரச்னை, தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 


Also Read: "போலீஸ்க்கு ஒரு வாரம் டைம்.. இல்லனா" கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கில் மம்தா தடாலடி!