Morning Headlines: 23 வகை நாய்களை வளர்க்க தடை! 4% அகவிலைப்படி உயர்வு.. யாருக்கு பொருந்தும்? முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 14: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- நாய் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க! இந்த 23 வகை நாய்களை வளர்க்க தடை! மத்திய அரசு அதிரடி..
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், “வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் கீழே குறிப்பிட்டுள்ள நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். அதாவது, பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். மேலும் படிக்க..
- 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு.. யாருக்கு பொருந்தும்? அரசாணை வெளியீடு..
தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூபாய் 2 ஆயிரத்து 888 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறவுள்ளனர். ஏற்கனவே அகவிலைப்படி 46 சதவீதமாக இருந்ததை தற்போது தமிழ்நாடு அரசு 50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தறபோது இந்த அகவிலைப்படி யாருக்கு பொருந்தும் என்பது குறித்து விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்டார் வேட்பாளர்களாக ஷிமோகா தொகுதியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றார். இந்த பட்டியலில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் எதுவும் இல்லை. மேலும் படிக்க..
- திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டி.. இன்று உறுதியாகும் தொகுதி பட்டியல்..?
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க இப்போது முதலே அறிவிப்புகள், பிரச்சாரங்கள் என தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை ஏற்கனவே அறிவித்தனர். இந்தநிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பை இன்று வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க..
- அதானி குழும பங்குகள் 13% வீழ்ச்சி - கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை!
அதானி போர்ட்ஸ், அதானி என்ட்ர்பிரைசஸ், அதானி க்ரீன் ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஏழாவது செசனாக சரிவை சந்தித்துள்ளது. அதானி குழும பங்குகள் 13% வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் முதலே அதானி குழும பங்கு சரிவடைந்தது வந்தது. மேலும் படிக்க..