Morning Headlines: இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? .. காலை 9 மணி செய்திகளாக இதோ.!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- சீமான் வழக்கில் திடீரென புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. இரவோடு இரவாக புகாரை வாபஸ் பெற்றது ஏன்..?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்மன் அளித்தும் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. . தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை. அவரை எதிர்கொள்ள எவரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
மணிப்பூரில் ஆய்வு மேற்கொண்ட எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (EGI), கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் EGI மீது மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் EGI வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி சந்திரசூட், கருத்து சுதந்திரம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். மேலும் படிக்க
- சென்னையில் இன்றும், நாளையும் பார்வைக்கு... காட்சியளிக்கும் உலகக் கோப்பை..! எங்கு தெரியுமா?
ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியானது பிரமாண்டமாக இந்தியாவில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இதனிடையே உலகக் கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்படுகிறது. மேலும் படிக்க
- ‘நான் அமெரிக்க அதிபரானால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன்’ - விவேக் ராமசாமி அதிரடி..!
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் களம் காண பல முனை போட்டி நிலவுகிறது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் ஒருவர். இதனிடையே தான் அமெரிக்காவின் அதிபரானால் அரசு நிறுவனங்களை மூடும் திட்டம் உள்ளதாகவும், 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கம்போல் அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் படிக்க
- கோவை கார் வெடிப்பு வழக்கு: பல்வேறு இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை..
உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜி.எம். நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.