POWERFUL ATOMIC BOMBS: பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டுகளின் பட்டியலில், ரஷ்யாவின் சார் பாம்பே அணுகுண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.


POWERFUL ATOMIC BOMBS:


சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளின் வளர்ச்சியும், பெருக்கமும் நவீன போரின் அடையாளமாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் பேரழிவு தாக்கம், முதன்மையான நாடுகளுக்கு இடையே நடந்து வரும் ஆயுதப் போட்டி காரணமாக, அதிகளவில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை உருவாக்கப்படுவதை உலகம் கண்டுள்ளது. அதில் மிக முக்கியமானதாக அணு ஆயுதங்கள் கருதப்படுகின்றன. மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் குறிப்பாக கதிரியக்க அணு ஆயுதங்கள் மனித இனத்திற்கே பேரபத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்த சூழலில் உலகின் மிக சக்திவாய்ந்த, ஆபத்தான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் 5 வெடிகுண்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


5. FOAB (Father of All Bombs):


ரஷ்யாவின் FOAB (Father Of All Bombs) என்பது ஒரு தெர்மோபரிக் குண்டு ஆகும். இதுவரை உருவாக்கப்பட்ட அணுகுண்டு அல்லாத வெடிபொருட்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். 44 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு (TNT - ஒரு வித வெடிபொருள்) சமமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக  இதன் காரணமாக, FOAB வெடிகுண்டு ஒரு சிறிய அணு ஆயுதத்திற்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுரங்கப்பாதை வளாகங்கள், பதுங்கு குழிகளை அழிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. 300 மீட்டர் சுற்றளவிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படும் என கூறப்படுகிறது.


4. MOAB (Massive Ordnance Air Blast):


அமெரிக்காவின் MOAB (Massive Ordnance Air Blast) என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு அல்லாத சக்திவாய்ந்த வெடிகுண்டு ஆகும். இது ஏப்ரல் 2017 இல் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டபோது உலகளாவிய கவனத்தைப் பெற்றது. MOAB என்பது போரில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வழக்கமான வெடிகுண்டு ஆகும். இது வெடிக்கும்போது 11 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு க்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 1 மைல் சுற்றளவிற்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


03. R-36M2 Voevoda (Satan)


R-36M2 Voevoda, மேற்கத்திய நாடுகளில் சாத்தான்" என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது பல சுயாதீனமாக இலக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய (எம்ஐஆர்வி) ஆயுதமாகும். ஒவ்வொரு எம்ஐஆர்வியும் 10 அணு ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியது. மேலும் இந்த ஏவுகணை 10,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. R-36M2 Voevoda ரஷ்யாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாகும். இது பல இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.


02. B83 Nuclear Bomb:


B83 என்பது அமெரிக்காவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஒரு தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு ஆகும்.  தற்போதும் பயன்பாட்டில் உள்ள உலகின் மிக சக்திவாய்ந்த குண்டுகளில் ஒன்றாகும். 300 டன் டிரினிட்ரோடோலூயினுக்கு சமமானதில் இருந்து,  1.2 மெகா டன்னுக்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தக்கூடியது ஆகும்.   B83 வெடிப்பினால் ஏற்படும் அதிர்ச்சி அலையானது 2.5 கிமீ சுற்றளவில் உள்ள உறுதியான கான்கிரீட் கட்டிடங்களை முழுவதுமாக சேதப்படுத்தி 100% உயிரிழப்புகளை ஏற்படுத்தும். 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டமைப்பு ரீதியாக பலவீனமான வீடுகள் மற்றும் கடைகளை தரைமட்டமாக்கும். 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறக்கூடும். இந்த வெடிகுண்டு வெளியிடும் கதிர்வீச்சு இறப்பு மற்றும் காயங்களை அதிகரிக்கும்.


01. Tsar Bomba:


RDS-220 என்றும் அழைக்கப்படும் Tsar Bomba, இதுவரை உருவாக்கப்பட்ட அணு குண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட பேராபத்தை ஏற்படுத்தும் இந்த சாதனம், அக்டோபர் 30, 1961 அன்று ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள  நோவாயா ஜெம்லியா தீவில் சோதிக்கப்பட்டது. 50 மெகாடன் டிரினிட்ரோடோலூயினுக்கு சமமான ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த குண்டு, இது இதுவரை வெடித்த அணு குண்டுகளில் மிகவும் சக்தி வாய்ந்தது. சோதனையின்போது 1000 கிமீ தூரத்தில் இருந்தாலும் தெரியும் அளவிலான ஒரு தீப்பிழம்பை ஏற்படுத்தியதோடு, 210,000 அடி உயரத்தை அடைந்த புகைமூட்டத்தை உருவாக்கியது.  வெடிக்கும் பகுதியிலிருந்து 55 கிலோ தொலைவிலான பகுதிக தரைமட்டமாக்கப்படும். 160 கிமீ தொலைவில் உள்ள கட்டிடங்கள் சேதமடையக்கூடும். குண்டுவெடிப்பின் வெப்பம் 100 கிமீ தொலைவில் இருக்கும் நபர்களுக்கு கூட மூன்றாம் நிலை தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.