பள்ளிக் கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா!

Continues below advertisement

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு. நிகழ்வில் 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

நாகை விரையும் விஜய்

Continues below advertisement

நாகை, திருவாரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை. சென்னையில் இருந்து திருச்சி தனி விமானத்தில் பயணித்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக ரேஞ்ச் ரோவர் காரில் நாகை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளார். இதனிடையே,  தொண்டர்கள் மரங்களில், மின் கம்பங்களில் ஏறக்கூடாது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு

பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்து ஆழ்கடலிலும் ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் பூம்புகாரில் ஆய்வுப் பணிகளை தொடங்கியது| தமிழ்நாடு தொல்லியல் துறை. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை பேராசிரியர் கே. ராஜன் தலைமையிலான வல்லுநர் குழு தொடங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்"

ஒரு மோதலை எப்படி விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும். ஆப்ரேசன் சிந்தூரை குறிப்பிட்டு விமானப்படை தளபதி ஏ.பி. சிங் பெருமிதம்.

இனி ஃபோனிலேயே புதுப்பிக்கலாம்!

ஆதார் அட்டைதாரர்கள் ஸ்மார்ட்ஃபோனிலிருந்தே தங்கள் விவரங்களை புதுப்பித்துக்கொள்வதற்கான  இ-ஆதார் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் செயலி மூலம் பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட்போன் மூலம் புதுப்பிக்க முடியும்; AI தொழில்நுட்பம் மூலம் தகவல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

“மொரட்டு Foodie-யா இருப்பாங்க போல!"

குஜராத்: சுர்சாகர் லேக் பகுதியில் சாலையோர கடை ஒன்றில் ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிவிட்டு, வெறும் 4 பூரிகளே கொடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அங்கு வந்த போலீசார் அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.

காஸாவில் தொடரும் துயரம்

காஸா நகர் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நகரத்தை விட்டு இதுவரை 4.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உளவாளிகளை சேர்க்க பிரிட்டன் புதிய திட்டம்!

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் உளவாளிகளை சேர்க்க பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான MI6, ஒரு டார்க் வெப் தளத்தை தொடங்கியுள்ளது. 'Silent Courier' என்ற டார்க் வெப் தளம் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உளவுத் தகவல்களைக் கொண்ட மக்களைப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முயற்சி.

அவெஞ்சர்ஸ் பட அப்டேட்!

ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் மார்வெல்ஸ் நிறுவனத்தின் Avengers: Doomsday படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு. VFX அதிகம் நிறைந்த படம் என்பதால் 14 மாத Post Production பணிகளுக்கு பிறகு 2026 டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியா ஹாட்ரிக் வெற்றி

ஆசியக் கோப்பை தொடரில் ஓமன் அணியை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி. சூப்பர் 4 சுற்றில், நாளை (செப்.21) பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது. ஓமன் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம், இப்போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச T20-ல் 100 விக்கெட்களை வீழ்த்தி அர்ஷ்தீப் சாதனை.