மேலும் அறிய

Top 10 News Headlines: துல்கர், மம்முட்டி வீடுகளில் ED சோதனை, EC-க்கு SC அதிரடி உத்தரவு, ட்ரம்ப்புக்கு ஹமாஸ் கன்டிஷன் - பரபரப்பான 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Oct. 8th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, 90 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராமிற்கு ரூ.100 உயர்ந்து, கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து, அரசின் நிதி உதவியை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தவெக உடன் கூட்டணியா என்பது போகப் போக தெரியும் எனவும் அன்புமணி ராமதாஸ் விளக்கம்.
  • சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பூடானிலிருந்து சட்டவிரோதமாக சொகுசுக் கார்கள் இறக்குமதி செய்த புகாரில் நடவடிக்கை. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்திலும் சோதனை.
  • தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வந்த 40 குடும்பத்தினரின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றிய அதிகாரிகள். ரயில்வேக்கு சொந்தமான இடம் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டதில் நடவடிக்கை.
  • நடிகர் மோகன்லால் பிராந்திய ராணுவத்தில் இணைந்து 16 ஆண்டுகள் முடிந்ததை அடுத்து ராணுவம் சார்பில் சிறப்பு மரியாதை.
  • பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
  • பீகாரில், என்டிஏ கூட்டணியில் 25 இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதால் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் அதிருப்தி என தகவல்.
  • இரு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தகக் குழுவுன் மும்பை வந்தடைந்தார்.
  • ராஜஸ்தானில், ஜெய்ப்பூர்-அஜ்மர் நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்ற லாரியின் மீது ரசாயம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பெரும் தீ விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
  • இஸ்ரேலை நம்ப முடியாது என்றும், காசா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் தங்களுக்கு சில உறுதிமொழிகளை அளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.
  • காசாவில் போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.
  • யூபிஐ பேமென்ட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் முகப்பதிவு அல்லது விரல்பதிவு மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமல்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: அதி கனமழை எச்சரிக்கை! 2 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- இதோ லிஸ்ட்!
TN Rain Alert: அதி கனமழை எச்சரிக்கை! 2 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- இதோ லிஸ்ட்!
Droupadi Murmu: அச்சோ.. சபரிமலை சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு- என்ன ஆச்சு?
Droupadi Murmu: அச்சோ.. சபரிமலை சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு- என்ன ஆச்சு?
Rohit Kohli: ஏமாத்திடாதிங்க சாமி..! ரோகித் & கோலி கம்பேக் கிடைக்குமா? அடிலெய்ட் மைதானம் - யாருக்கு எப்படி?
Rohit Kohli: ஏமாத்திடாதிங்க சாமி..! ரோகித் & கோலி கம்பேக் கிடைக்குமா? அடிலெய்ட் மைதானம் - யாருக்கு எப்படி?
Russia Ukraine War: ட்ரம்பின் 20 அம்ச திட்டம் போலவே 12 அம்ச அமைதித் திட்டம்; உக்ரைனுடன் களமிறங்கும் ஐரோப்பிய நாடுகள்
ட்ரம்பின் 20 அம்ச திட்டம் போலவே 12 அம்ச அமைதித் திட்டம்; உக்ரைனுடன் களமிறங்கும் ஐரோப்பிய நாடுகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”சாதி இப்பவும் இருக்கு தான! மாரி செல்வராஜின் வலிகள்”துருவ் SUPPORT
தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
ஆரம்பிக்கலாங்களா... 6 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த இடங்களுக்கு வார்னிங்
Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா!
Children gift to Sanitation workers |தூய்மை பணியாளர்களுக்கு giftசிறுவர்கள் நெகிழ்ச்சி செயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: அதி கனமழை எச்சரிக்கை! 2 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- இதோ லிஸ்ட்!
TN Rain Alert: அதி கனமழை எச்சரிக்கை! 2 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- இதோ லிஸ்ட்!
Droupadi Murmu: அச்சோ.. சபரிமலை சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு- என்ன ஆச்சு?
Droupadi Murmu: அச்சோ.. சபரிமலை சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு- என்ன ஆச்சு?
Rohit Kohli: ஏமாத்திடாதிங்க சாமி..! ரோகித் & கோலி கம்பேக் கிடைக்குமா? அடிலெய்ட் மைதானம் - யாருக்கு எப்படி?
Rohit Kohli: ஏமாத்திடாதிங்க சாமி..! ரோகித் & கோலி கம்பேக் கிடைக்குமா? அடிலெய்ட் மைதானம் - யாருக்கு எப்படி?
Russia Ukraine War: ட்ரம்பின் 20 அம்ச திட்டம் போலவே 12 அம்ச அமைதித் திட்டம்; உக்ரைனுடன் களமிறங்கும் ஐரோப்பிய நாடுகள்
ட்ரம்பின் 20 அம்ச திட்டம் போலவே 12 அம்ச அமைதித் திட்டம்; உக்ரைனுடன் களமிறங்கும் ஐரோப்பிய நாடுகள்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
India Usa Trade: ரைட்டு..! வருகிறது ஒப்பந்தம்? ”அமெரிக்காவிற்கு திறந்து விடப்படும் இந்திய சந்தை” பணிந்தார் மோடி?
India Usa Trade: ரைட்டு..! வருகிறது ஒப்பந்தம்? ”அமெரிக்காவிற்கு திறந்து விடப்படும் இந்திய சந்தை” பணிந்தார் மோடி?
TN Weather Forecast: அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்
TN Weather Forecast: அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்
Top 10 News Headlines: புயல் உருவாக வாய்ப்பில்லை, டெல்டா செல்லும் இபிஎஸ், மோடியை மீண்டும் வம்பிற்கிழுக்கும் ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
புயல் உருவாக வாய்ப்பில்லை, டெல்டா செல்லும் இபிஎஸ், மோடியை மீண்டும் வம்பிற்கிழுக்கும் ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Embed widget