Top 10 News Headlines: இருமடங்கு கட்டணம், இந்தியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, வாட்ஸ்-அப்பில் சிக்கல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Oct 5th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

கரூர் துயரம் - SIT விசாரணை தொடங்கியது
கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று விசாரணையை தொடங்கியது
இச்சம்பவத்தில் இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்துள்ளார்
உச்சநீதிமன்றத்தை நாடிய தவெக நிர்வாகிகள்
த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு. தலைமறைவாக உள்ள இருவரின் முன்ஜாமின் மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருமடங்கு கட்டணம்
நாடு முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி முதல், பணம் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்தினால் வழக்கமான தொகையை விட இருமடங்கு கூடுதல் தொகையை தர வேண்டும்.
பாஸ்டேக் முறையில் இருந்து விடுபட்டவர்களை அதற்குள் சேர்க்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவின் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை
ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய 'Dhvani' என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2025 இறுதிக்குள் சோதிக்க DRDO அமைப்பு திட்டம். மணிக்கு 7,400 கி.மீ. வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணை, இஸ்ரேலின் Iron Dome, அமெரிக்காவின் THAAD போன்ற அமைப்புகளால்கூட இடைமறித்து அழிக்க மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.
பீகார் தேர்தல் எப்போது?
பீகாரில் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக மட்டுமே தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கட்சிகள் கோரிக்கை. மாநிலம் முழுவதும் வரும் 28ம் தேதி வரை சத் பூஜை கொண்டாட்டங்கள் நடக்கும் என்பதால், அதன் பிறகே சட்டப் தேர்தலை வைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிப்பு.)
மருந்துக்கு தொடரும் தடை
மத்திய பிரதேசம், தமிழ்நாட்டை தொடர்ந்து கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்தது கேரள மாநில அரசு. மபியின் சிந்த்வாரா மாவட்டத்தில் இந்த இருமல் மருந்தை குடித்த குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மாநில அரசுகள் நடவடிக்கை.
கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு நாடகம் தடுத்து நிறுத்தம்!
கேரளாவின் கும்பளா அரசுப் பள்ளியில் மாணவர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு மைம் நாடகத்தை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதற்கு கடும் எதிர்ப்பு. ஆசிரியர்களைக் கண்டித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டம் நடத்திய நிலையில், மைம் நாடகத்தை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உறுதி.
ஹமாஸிற்கு மீண்டும் எச்சரிக்கை
காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல். பணயக்கைதிகள் விடுதலை செய்ய ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைப்பு, அதை உடனடியாக செய்ய வேண்டும்| என்றும், மேலும் தாமதம் ஆகுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை.
வாட்ஸ்-அப்பில் வந்த சிக்கல்
iOS 26 அப்டேட்டுக்கு பிறகு WhatsApp வாய்ஸ் காலின் போது, மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியவில்லை என பயனர்கள் குற்றச்சாட்டு. வீடியோ கால் செய்யும்போது இந்த சிக்கல் இல்லை எனவும், WhatsApp நிறுவனம் உடனே இதை சரி செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை
.
இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில், தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை| இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கொழும்புவில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.





















