• 2 நட்கள் பயணமாக இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.
  • பண்டிகை காலம் வருவதையொட்டி மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு 4,144 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு.
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு. சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. ஒரு கிராம் ரூ.10,880-க்கும், ஒரு சவரன் ரூ.87,040-க்கும் விற்பனை. வெள்ளியின் விலை கிராம் ரூ.163-ஆக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சம்.
  • ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை(அக். 3) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
  • மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர் தூரி மரியாதை செலுத்தினர்.
  • நமது மக்களை கொன்ற பயங்கரவாதிகள் மீது ஹனுமனின் வழியை பின்பற்றி ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்குதல் நடத்தியதாக, ராணுவ வீரர்கள் மத்தியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
  • ‘ராஷ்ட்ரநீதி‘ என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி அரசு அறிவிப்பு.
  • ரூ.12,490 கோடி சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பணக்கார நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான். பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். 
  • தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
  • ட்ரம்ப்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் நிராகரித்து, திருத்தங்களை கேட்டுள்ள நிலையில், காசா பகுதியில் ராணுவ முற்றுகையை இறுக்கியது இஸ்ரேல்.
  • 4 வாரங்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனாவுடனான நட்பை இந்தியா பலப்படுத்திவரும் நிலையில், ஜின்பிங்குடன் ட்ரம்ப்  சந்திப்பு.
  • சுமார் 500 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
  • இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.