• வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா‘ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றதாகவும், இன்று இரவு தீவிர புயலாகவே மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே  கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • ‘மோன்தா‘ தீவிரப் புயலாக வலுப்பெய்ய நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
  • ‘மோன்தா‘ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.
  • புயல் எதிரொலியாக, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது.
  • ‘மோன்தா‘ புயல் எதிரொலியாக, சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 3 விமானங்கள் ரத்து. இதேபோல், ஆந்திராவில் இருந்து சென்னை வரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • புதுச்சேரி ஏனாமில், ‘மோன்தா‘ புயல் காரணமாக, பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுவை அரசு உத்தரவு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து, கிராம் ரூ.11,300-க்கு  விற்பனை. வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.5 குறைந்து,  ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை.
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம். செல்லும் வழியில் ‘தல..தல‘ என கூச்சலிட்ட ரசிகர்களை சைகையால் அமைதிப் படுத்தினார் அஜித்.
  • தனது புகைப்படங்களை டீப் ஃபேக் வீடியோவாக உருவாக்கி, ஆபாச தளங்களில் வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கோரி, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீசில் நடிகர் சிரஞ்சீவி புகார்.
  • 2020 விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி குறித்த அவதூறு கருத்துக்காக, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் கங்கனா ரணாவத்.
  • ரஷ்யா அணுசக்தி ஏவுகணை சோதனை மேற்கொண்ட நிலையில், அந்நாட்டு கடல் எல்லைக்கு அருகிலேயே தங்களது உலகின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிற்பதாக ட்ரம்ப் மறைமுக எச்சரிக்கை.
  • 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு. நிறுவனச் செலவுகளை குறைக்கவும், அதிகப்படியாக நியமிக்கப்பட்ட ஆன்லைன் பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு என விளக்கம்.
  • செர்பியாவில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுஜீத் கல்கல்.
  • நடப்பாண்டின் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிவிப்பு. காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக கணமடையவில்லை என தகவல்.

 

Continues below advertisement

Continues below advertisement