• இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்.

  • கரூர் சம்பவத்திற்குப் பின் தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு.

  • கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு, வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்படுள்ளது.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,96ட்0 உயர்ந்து, ஒரு சவரன் 94,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,825-க்கும் விற்பனை. வெள்ளி விலையும் அதிடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.206-க்கு விற்பனை.

  • தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.

  • தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு.

  • வருங்கால வைப்பு நிதியில் 100% வரை பணம் எடுக்க அனுமதி என மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு. பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை கல்விக்கு 10 மடங்கும், திருமணத்திற்கு 5 மடங்கும் அதிகரிக்க திட்டம்.

  • இந்தியாவின் நிகர நேரடி வரி வருவாய் அக். 12-ம் தேதி நிலவரப்படி, நடப்பு நிதியாண்டில் 6.33 சதவீதம் அதிகரித்து, ரூ.11.89 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை.

  • ஹரியானாவில் வைக்கோலை எரிக்காமல் விடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,200 வெகுமதி என அறிவிப்பு.

  • காசா அமைதி திட்ட ஒப்பந்தத்தில் முதல் நபராக கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது நிச்சயம் நிலைத்து நிற்கும் என்றும் பேச்சு.

  • மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவருவதற்கான ட்ரம்ப்பின் உண்மையான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக மோடி கருத்து.

  • அமெரிக்கா உடனான வர்த்தகப் போரில் இறுதிவரை போராட தயாராக உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. வரி மற்றும் வர்த்தகப் போரில் சீனாவின் நிலைப்பாடு நிலையாக உள்ளதாகவும் கருத்து.

  • எகிப்தில் இத்தாலி பிரமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், அவர் அழகாக இருப்பதாக வர்ணிப்பு. இதையே அமெரிக்காவில் பேசியிருந்தால் அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் கலகலப்பாக பேச்சு.

  • AI ChatBot-களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓய்வெடுக்கவும், நீங்கள் பேசுவது சாட்போட்டுடன் தான் மனிதர்களிடம் இல்லை எனவும் அலெர்ட் கொடுக்க புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்.


 

Continues below advertisement